சின்னத்திரையின் பிரபலமான நடிகை ஆலியா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் மிகவும் பிரபலமானார். இவரது உண்மையான பெயரை சொன்னால் கூட இன்னும் பலருக்கு தெரியாது ஆனால் செம்பா என்றால் பலரும் சட்டென்று ஓ ராஜா ராணி சீரியலில் நடித்தவரா என்று கேட்பார்கள். அந்த அளவிற்கு ராஜா ராணி சீரியல் செம்பாவாக ரசிகர்களின் மனதில் இடம் பெற்றுள்ளார்.
ராஜா ராணி சீரியல் மூலம் பரபரப்பாக பேசப்பட்ட சஞ்சீவ்-ஆல்யா மானசா ஜோடி, நிஜ வாழ்விலும் ஒன்று சேர்ந்தது. இவர்களுக்கு அய்லா சையத் என்ற அழகான பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. சஞ்சீவும், ஆல்யாவும் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்வார்கள்.
இதற்காகவே, இவர்களுக்கு மிகப்பெரியர் ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இவர்கள் இருவரும் ஷாப்பிங் சென்றது , புதிய கார் வாங்கியது, தங்களது திருமணம் குறித்து விளக்கியது, மற்றும் இவர்களின் குழந்தையுடன் விளையாடும் கியூட்டான வீடியோக்கள் இணையத்தில் வைரலானது.
இதனிடையே குழந்தை பிறந்தவுடன் சில நாட்கள் ஓய்வில் இருந்த ஆல்யா மானசா, ராஜா ராணி 2 மூலம் மீண்டும் சின்னத்திரைக்கு திரும்பினார். அதில் படித்த பெண்ணான சந்தியா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் ஆலியா, படிக்காத சரவணன் என்பவரை திருமணம் செய்து கொள்கிறார். அதன் பின்னர் அவருக்கு ஏற்படும் அந்த கூட்டு குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள் என குறித்து கதை நகர்ந்தது. மேலும் இந்த தொடரில் IPS ஆக வேண்டும் என்ற கனவோடு இருக்கும் ஒரு பெண்ணாக ஆலியா நடித்து வந்தார்.
Happy Birthday Parvathy: மிஸ் பண்ணக் கூடாத பார்வதியின் 5 படங்கள்!
இதனிடையே ஆலியா இரண்டாவதாக கர்ப்பமடைந்தார். பிரசவ காலம் நெருங்கியதை அடுத்து ராஜா ராணி 2ல் இருந்து ஆலியா விலகினார். அவருக்கு பதில் வேறொரு நாயகி சந்தியாவாக நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை ஆல்யாவிற்கு கடந்த மார்ச் 27ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு அவர்கள் அர்ஷ் என்று பெயர் வைத்துள்ளனர்.
HBD Parvathy: தனித்துத் தெரியும் நடிகை பார்வதியின் பிறந்தநாள்! - படங்கள்
சஞ்சீவ்-ஆல்யா இருவரும் நடத்தி வரும் யூடியூப் சேனலில் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டனர். மேலும் குழந்தை பிறந்ததை வீடியோவாக அழகாக பதிவு செய்து ஷேர் செய்துள்ளனர். அதில், ஆலியா வீட்டில் இருந்து மருத்துவமனை சென்றதில் இருந்து குழந்தை பிறந்து கையில் ஏந்திய காட்சிகள் வரை உள்ளது. இறுதியாக ஆலியா மகள் தனது தம்பியை காண கியூட்டாக ஓடி வரும் காட்சிகளுடன் வீடியோ நிறைவடைகிறது. இந்த வீடியோவை இதுவரை 18 லட்சம் பேர் பார்த்துள்ளனர். மேலும் கமெண்ட்ஸ் செய்துள்ளனர். ஆலியா, சஞ்சீவ் தம்பதியின் ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.