Home /News /entertainment /

17 அரியர்.. பாதியில் விட்ட படிப்பு! ஆல்யா மானசாவின் கல்லூரி வாழ்க்கை இதுதான்!

17 அரியர்.. பாதியில் விட்ட படிப்பு! ஆல்யா மானசாவின் கல்லூரி வாழ்க்கை இதுதான்!

ஆல்யா மானசா - சஞ்சீவ்

ஆல்யா மானசா - சஞ்சீவ்

ஆல்யா மானசா கொடுத்த பதில் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

  ஆல்யா மானசாவின் கல்லூரி நாட்கள் குறித்து அவரே தனது ரசிகர்களுக்கு அளித்திருக்கும் பதில் நெட்டிசன்களின் கவனத்தை பெற்றுள்ளது.

  பிரபல சீரியல் நட்சத்திரமான ஆல்யா மானசாவுக்கு 2 வது குழந்தை பிறந்துள்ளது அனைவருக்கும் தெரியும்.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மிகப் பெரிய வெற்றி பெற்ற ராஜா ராணி சீரியலின் முதல் பாகத்தில் ஜோடியாக நடித்தவர்கள் தான் ஆல்யா மானசா – சஞ்சீவ். சீரியலில் ரீல் ஜோடிகளாக நடித்த இருவரும் நிஜ வாழ்க்கையிலும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். ஆல்யாவுக்கு ஐலா என்ற பெண் குழந்தை பிறந்தது. இதனால் அவர் சின்னத்திரையில் இருந்து பிரேக் எடுத்தார். பின்னர் சின்ன கேப்புக்கு பின்பு உடல் எடையை குறைத்து ஆல்யா ரீ என்ட்ரி கொடுத்தார்.

  குக் வித் கோமாளி ஸ்ருதிகாவுக்கு எந்த வயசுல திருமணம் நடந்தது தெரியுமா? அவரே சொன்ன ஷாக்கிங் தகவல்!

  ஆல்யாவின் டிரேட் மார்க் சீரியலான ‘ராஜா ராணி’ சீரியலின் 2வது பாகத்திலும் அவரே ஹீரோயினாக நடித்தார். ஹீரோவாக சித்து. கணவர் சஞ்சீவுடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடித்ததுபோலவே, சித்துவுடனும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் பேராதரவை ஆல்யா பெற்றார். அதே போல் தனது கணருடன் சேர்ந்து யூடியூப் சேனல் தொடங்கி அதிலும் ஆல்யா கலக்க தொடங்கினார். இந்த சேனலில் ஆல்யா - சஞ்சீவின் மொத்த குடும்பத்தையும் பார்க்கலாம். குறிப்பாக ஐலா பாப்பாவின் அட்ராசிட்டிகளுக்கு தனி ஃபேன்ஸ் பட்டாளமே உண்டு.   
  View this post on Instagram

   

  A post shared by alya_manasa (@alya_manasa)


  ஒருபக்கம் கயல் சீரியலில் சஞ்சீவ் பிஸி, மறுபக்கம் ஆல்யா விஜய் டிவியில் பிஸி என இவர்கள் லைஃப் சென்றுக் கொண்டிருக்க, ஆல்யா 2வது முறையாக கர்ப்பமாக இருப்பதாக கூறினார். அதனைத் தொடர்ந்து 9 வது மாதம் சீரியலை விட்டும் விலகினார். ஆரம்பத்தில் ஆல்யா பிரசவத்திற்கு பின்பு பாரதி கண்ணம்மா வெண்பா போல் நடிக்க வந்து விடுவார் என்று தான் ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் பிறகு ஆல்யா நிரந்தரமாக சீரியலில் இருந்து விலகி விட்டார் என்ற தகவல் வெளியானது. தற்சமயம் 2 குழந்தைகள், கணவர், மாமியார் என குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்கும் ஆல்யா அவ்வப்போது இன்ஸ்டாவில் ரசிகர்களின் கேள்விக்கும் பதில் கூறி வருகிறார்.

  பாக்கியா வீட்டுக்கு வரும் ராதிகா... கோபி மாட்டபோகும் நேரமா இது?

  அந்த வகையில், சமீபத்தில் ரசிகர் ஒருவர், ஆல்யா கல்லூரியில் எடுத்த மதிப்பெண்கள் குறித்து கேட்டிருக்கிறார். அதற்கு ஆல்யா கொடுத்த பதில் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கல்லூரியில் ஆல்யா 17 அரியராம், அதுமட்டுமில்லை பாதியிலே கல்லூரி படிப்பை நிறுத்தி விட்டாராம். இந்த தகவலுடன் மற்றொரு விஷயத்தை ஆல்யா கூறியுள்ளார். அதாவது இப்போது நடப்பதை நினைத்து கவலைப்படாதீர்கள் உங்களுக்கு பிடித்தை தொடர்ந்து செய்து அதன் வழியே செல்லுங்கள் நாளை வாழ்க்கை மாறும் எனவும் கூறியுள்ளார். ஆல்யாவின் இந்த வார்த்தைகள் அவரின் ரசிகர்களுக்கு இன்ஸ்ப்ரேஷனாக அமைந்துள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja
  First published:

  Tags: Alya Manasa, TV Serial, Vijay tv

  அடுத்த செய்தி