Home /News /entertainment /

7வது மாச வளைகாப்பும் முடிந்தது.. ராஜா ராணி 2வில் இருந்து கிளம்புகிறாரா ஆல்யா மானசா?

7வது மாச வளைகாப்பும் முடிந்தது.. ராஜா ராணி 2வில் இருந்து கிளம்புகிறாரா ஆல்யா மானசா?

ஆல்யா மானசா

ஆல்யா மானசா

ஆல்யா மானசா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார். தற்போது ராஜா ராணி சீசன் 2 சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது

    ஸ்டார் விஜய் டிவி சின்னத்திரை மூலம் எண்ணற்ற பிரபலங்களை உருவாக்கி வருகிறது. விஜய் டிவி ஷோ அல்லது சீரியலில் இடம்பெறும் கலைஞர்கள் வெகு விரைவில் மக்கள் மத்தியில் பிரபலமடைந்து விடுகிறார்கள். பின்னர் தொடர்ந்து புகழ் வெளிச்சத்திலேயே இருக்கிறார்கள். அந்த வகையில் விஜய் டிவி சீரியல்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறார் சீரியல் நடிகை ஆல்யா மானசா. 1992-ஆம் ஆண்டு மே மாதம் பிறந்த இவர் ஒரு சிறந்த டான்ஸரும் ஆவார்.

    கலைஞர் டிவியில் ஒளிபரப்பான மானாட மயிலாட(சீசன் 10) டான்ஸ் ஷோவில் பங்கேற்று உள்ளார். விமர்சனங்கள் பல இருந்தாலும் சின்னத்திரை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை என இரண்டிலும் வெற்றிகரமாக இருப்பவர் ஆல்யா மானசா. இவருக்கென்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் இன்ஸ்டா மற்றும் யூடியூப் உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களில் லட்சக்கணக்கான ஃபாலோயர்ஸை கொண்டுள்ளார். விஜய் டிவி-யில் இதுவரை ஒளிபரப்பான ஹிட் சீரியல்களின் வரிசையில் ராஜா ராணி சீரியலும் ஒன்று. ராஜா ராணி சீசன் 1-ல் தன்னுடன் ஜோடியாக நடித்த நடிகர் சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.

    இதையும் படிங்க.. கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படத்திற்கு இசையமைக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்!

    ஏற்கனவே சஞ்சீவ் - ஆல்யா மானசா தம்பதிக்கு அய்லா சையத் என்ற பெண் குழந்தை இருக்கிறது. தற்போது விஜய் டிவி-யில் இரவு 9.30 முதல் 10 மணி வரை ஒளிபரப்பாகும் ராஜா ராணி சீசன்-2 சீரியலில் சந்தியா என்ற லீடிங் கேரக்டரில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது நடிகை ஆல்யா மானசா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார். தற்போது ராஜா ராணி சீசன் 2 சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த சூழலில் தனக்கு இரண்டாவது குழந்தை ஏப்ரல் கடைசி அல்லது மே முதல் வாரத்தில் பிறக்க வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் கூறி இருப்பதாக ஆல்யா தெரிவித்து இருக்கிறார்.



    இன்ஸ்டாவில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர் இந்த தகவலை தெரிவித்தார். இதனை தொடர்ந்து மற்றொரு ரசிகர் ஆல்யாவிடம் கர்ப்பமாக இருப்பதால் விரைவில் ராஜா ராணி சீரியலை விட்டு நிற்க போகிறீர்களா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்துள்ள நடிகை ஆல்யா, "ராஜா ராணி சீரியலில் இருந்து விலகும் எண்ணம் இல்லை.ஒரே ஒரு சந்தியா தான் அது இந்த ஆல்யா மட்டும் தான்" என்று குறிப்பிட்டு சீரியலை விட்டு விளக்க உள் ளதாக வெளியான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து உள்ளார்.

    இதையும் படிங்க.. விஜய்யின் வில்லன் அல்ல செல்வராகவன் - வெளியான புதிய தகவல்!

    மேலும் தனக்கு இரண்டாவதாக பிறக்க போகும் குழந்தை ஆண் என்றால் அர்ஷ், பெண் குழந்தை என்றால் லைலா என பெயர் வைக்க போவதாகவும் இன்ஸ்டாவில் தெரிவித்து உள்ளார் நடிகை ஆல்யா மானசா.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி