• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ஆல்யா மானசாவின் கெத்து... புது பைக்கில் சித்துவை வைத்து டபுள்ஸ்!

ஆல்யா மானசாவின் கெத்து... புது பைக்கில் சித்துவை வைத்து டபுள்ஸ்!

ஆல்யா மானசா

ஆல்யா மானசா

டிகை ஆல்யா மானசா, சீரியல் நடிகர் சித்துவை தனது பைக்கின் பின்னால் உட்கார வைத்து கெத்தாக ஓட்டுகிறார்

  • Share this:
    விஜய் டிவி-யில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் செம்பா என்ற கேரக்டரில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றவர் நடிகை ஆல்யா மானசா.

    இவர் அடிப்படையில் ஒரு டான்ஸர் ஆவார். கலைஞர் டிவியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நடன நிகழ்ச்சியிலும் பங்கேற்று உள்ளார். ஏராளமான விமர்சனங்கள் இவர் மீது வைக்கப்பட்டாலும் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை இரண்டையும் வெற்றிகரமாக பேலன்ஸ் செய்து வருகிறார்.

    ராஜா ராணி சீரியலில் நடிக்கும் போது தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவை காதலித்தார். இதனை அடுத்து சின்னத்திரையில் ரசிகர்கள் பெரிதும் விரும்பிய கார்த்தி - செம்பா ஜோடியாக இருந்த இவர்கள், நிஜ வாழ்வில் சஞ்சீவ் - ஆல்யா மானசா ஜோடியாகி காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தற்போது அய்லா சையத் என்ற பெண் குழந்தை உள்ளது.

    குழந்தை பிறந்தவுடன் சில நாட்கள் ஓய்வில் இருந்த ஆல்யா மானசா, ராஜா ராணி 2 மூலம் மீண்டும் சின்னத்திரைக்கு திரும்பினார். ராஜா ராணி சீரியல் செம்பாவாக ரசிகர்களின் மனதில் இடம் பெற்றுள்ளார். தற்போது விஜய் டிவி-யில் இரவு நேரத்தில் 9.30-க்கு ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2-வில், சந்தியா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். ஐபிஎஸ் ஆக வேண்டும் என்று லட்சியத்துடன் நாயகிக்கு திடீரென திருமணம் நட்க்கிறது. இதன்பிறகு அவள் தனது லட்சியத்தை அடைய என்னவெல்லாம் செய்தால் என்பதே இந்த சீரியலின் கதை. கடந்த சில நாட்களாக சண்டையும் சச்சரவுமாக சென்ற இந்த சீரியல் தற்போது ரொமான்ஸ் காட்சிகளால் நிறைந்து வருகிறது




    பிரவீன் பென்னட் இயக்கத்தில் சித்து மற்றும் ஆல்யா மானசா இருவரும் ஜோடியாக நடித்து வரும் இந்த சீரியல் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் பிசியாக இருந்தாலும் இன்ஸ்டா, பேஸ்புக் உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஆல்யா, தனது வாழ்வில் நடக்கும் நிகழ்வுகள் குறித்து அவ்வப்போது வீடியோ, புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார். மேலும் யூடியூபிலும் சஞ்சீவ் ஆல்யா என்ற பெயரில் சேனல் ஆரம்பித்துள்ளனர். இந்த சேனலை 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாலோ செய்கின்றனர்.

    இந்நிலையில் தனது படப்பிடிப்பு தளத்தில் எடுத்த ஒரு வீடியோவை சந்தியா அவரது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இதில் நடிகை ஆல்யா மானசா, சீரியல் நடிகர் சித்துவை தனது பைக்கின் பின்னால் உட்கார வைத்து கெத்தாக ஓட்டுகிறார். இந்த வீடியோ தற்போது ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: