ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஆல்யா மானசாவின் புதிய சீரியல்... ஆனால் இந்த முறை வேறு சேனல்!

ஆல்யா மானசாவின் புதிய சீரியல்... ஆனால் இந்த முறை வேறு சேனல்!

சன் டிவி-யில் விரைவில் ஒளிபரப்பாகவிருக்கும் இனியா என்ற சீரியலில் தான் ஆல்யா மானசா நடிக்கவிருக்கிறார்.

சன் டிவி-யில் விரைவில் ஒளிபரப்பாகவிருக்கும் இனியா என்ற சீரியலில் தான் ஆல்யா மானசா நடிக்கவிருக்கிறார்.

சன் டிவி-யில் விரைவில் ஒளிபரப்பாகவிருக்கும் இனியா என்ற சீரியலில் தான் ஆல்யா மானசா நடிக்கவிருக்கிறார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகை ஆல்யா மானசா சன் டிவி-யில் ஒளிபரப்பாகவிருக்கும் இனியா என்ற தொடரில் நடிக்கவிருக்கிறார்.

சன் டிவி, விஜய் டிவி, கலர்ஸ் தமிழ், ஜீ தமிழ் போன்ற பிரபல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடிக்கும் நடிகைகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அப்படி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் ஆல்யா மானசா.

மானாட மயிலாட நடன நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துக் கொண்ட ஆல்யா மானசா, 2017 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ராஜா ராணி சீரியலில் செம்பாவாக அறிமுகமானார். இந்த சீரியலில் ஆல்யாவுக்கு ஜோடியாக சஞ்சீவ் கார்த்திக் நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது.

பின்னர் இந்த காதல் ஜோடி திருமணமும் செய்துக்கொண்டனர். முதல் குழந்தை பிறந்த பிறகு ஆல்யா மானசா உடல் எடையை குறைத்து ராஜா ராணி 2 சீரியலில் சந்தியாவாக என்ட்ரி கொடுத்தார். ராஜா ராணி பாகம் ஒன்றிற்கு கிடைத்த வரவேற்பை விட இரண்டாம் பாகத்திற்கு கூடுதல் வரவேற்பு கிடைத்தது.

ராஜா ராணி 2 சீரியல் விறுவிறுப்பாக சென்றுக்கொண்டிருந்த நேரத்தில் ஆல்யா இரண்டாவது முறை கர்ப்பமானார். 9 மாதங்கள் வரை சீரியலில் நடித்த ஆல்யா சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். பின்னர் அவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் அவர் சீரியலில் நடிக்க தயாராகி வருகிறார்.

' isDesktop="true" id="846194" youtubeid="cIwLxg_8Nk0" category="television">

இம்முறை விஜய் டிவி-யில் அல்ல. இதனை சரிகமா நிறுவனம் தயாரிக்கிறது. அந்நிறுவனம் தயாரிப்பில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியல் முடிவடையும் நிலையில், அதே நேரத்தில் இனியா ஒளிபரப்பாகும் எனத் தெரிகிறது.

ஒருவழியாக டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட்டை தெரிந்துக் கொண்ட பாரதி... விறுவிறுப்பாகும் பாரதி கண்ணம்மா!

தவிர, ஆல்யா மானசாவின் கணவர் சஞ்சீவ், சன் டிவி-யில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலில் ஹீரோவாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Sun TV, TV Serial