ஆல்யா மானசா , ஐலா பாப்பாவுடன் கயல் சீரியலின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு விசிட் அடித்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சின்னத்திரையே பொறாமை படும் அளவுக்கு கல்யாணத்திற்கு பிறகு காதல் பறவைகளாக சுற்றி வருகிறார்கள் ஆல்யா - சஞ்சீவ் ஜோடி. இவர்களுக்கு ஐலா, அர்ஷ் என 2 குழந்தைகள் உள்ளனர். ராஜா ராணி சீரியலில் நடித்த போது இருவருக்கும் காதல் ஏற்பட கடைசியில் இவர்களின் காதல் கல்யாணத்தில் முடிந்தது. அதுமட்டுமில்லை ஆல்யாவின் கல்யாணத்திற்கு அவரின் வீட்டில் சம்மதம் தெரிவிக்கவில்லை. சஞ்சீவ் பிடிவாதமாக இருந்து ஆல்யாவை கரம் பிடித்தார். இவர்களின் காதல் கதை இணையத்தில் படு வைரல். திருமணத்திற்கு பிறகு ஆல்யா சீரியலில் இருந்து விலகினார்.
அவர் எங்களை விட்டு சென்று விட்டார்.. கண்ணீர் விட்டு அழுத பிரபல சீரியல் நடிகை!
சஞ்சீவ் தொடர்ந்து நடித்து வந்தார். 2 வருடத்திற்கு பிறகு மீண்டும் ரீ என ட்ரி கொடுத்தார் ஆல்யா. ராஜா ராணி 2 சீரியலில் சந்தியா என்ற ரோலில் ஆல்யாவின் என்ட்ரி மாஸாக அமைய அனைவரும் மீண்டும் ஆல்யாவை கொண்டாட தொடங்கினர். கொரோனா லாக்டவுனில் இந்த ஜோடி யூடியூப் சேனல் தொடங்கி அதிலும் கெத்து காட்டி வருகிறார்கள். இவர்களின் வீடியோ எப்போதுமே ட்ரெண்டிங்கில் இடம் பிடிக்கிறது.
அவர் என்னை மடியில் அமர சொன்னார்.. பகீர் கிளப்பிய சீரியல் நடிகை ஸ்ரீநிதி!
இதற்கு நடுவில் சஞ்சீவ் சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் கயல் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் ஆல்யா இரண்டாவது குழந்தைக்கு பின்பு சீரியலில் இருந்து ஒதுங்கி விட்டார். இருப்பினும் யூடியூப்பில் இன்ஸ்டாவில் ஆல்யாவை பார்க்கலாம். இந்நிலையில் கயல் சீரியலில் பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கும் சஞ்சீவ் மற்றும் மற்ற நடிகர், நடிகைகளை பார்க்க ஐலா பாப்புவுடன் ஆல்யா விசிட் அடித்துள்ளார்.
தற்போது கயல் சீரியலில் கயலின் தங்கை கல்யாண எபிசோடு பரபரப்பாக ஒளிப்பரப்பாகி வருகிறது. திருமண எபிசோடு ஷூட்டிங் ஸ்பாட்டில் தான் ஆல்யா ஐலாவுடன் சென்று எல்லோருக்கும் ஹாய், பாய் சொல்லி அவர்களுடன் செல்பியும் எடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
View this post on Instagram
இது முதல் முறை இல்லை, ராஜா ராணி சீரியலில் ஆல்யா நடித்துக் கொண்டிருக்கும் போது அடிக்கடி சஞ்சீவ் சென்று ஆல்யாவுக்கு சர்ப்பிரைஸ் கொடுப்பார். இப்போது சஞ்சீவ் ஷூட்டிங்கில் இருக்கும் சமயம் ஆல்யா அவரை நேரில் சென்று பார்த்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், ஆல்யா போல் மனைவி கிடைக்க சஞ்சீவ் கொடுத்து வச்சிருக்கணும் என்கின்றனர் .
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Alya Manasa, Sun TV, TV Serial, Vijay tv