Home /News /entertainment /

பிரசவத்திற்கு முன்பு ஆல்யா மானசா கேட்ட அந்த ஒரு விஷயம்.. ஷாக்கான சஞ்சீவ்!

பிரசவத்திற்கு முன்பு ஆல்யா மானசா கேட்ட அந்த ஒரு விஷயம்.. ஷாக்கான சஞ்சீவ்!

ஆல்யா - சஞ்சீவ்

ஆல்யா - சஞ்சீவ்

ஆல்யா மீண்டும் வருவார் என ரசிகர்கள் எதிர்பார்க்க, இனிமேல் சந்தியாவாக வர மாட்டேன் எனவும் ஆல்யா கூறி இருந்தார்.

    ஆல்யா மானசாவின் 2வது குழந்தை ஹர்ஷ் பிறப்பதற்கு முன்பு ஆஸ்பீட்டலில் அரங்கேறிய லூட்டிகளை சஞ்சீவ் தனது யூடியூப் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் ஆப்ரேஷன் வார்டுக்கு செல்வதற்கு முன்பு ஆல்யா கேட்ட விஷயம் வீடியோ பார்ப்பவர்களையும் ஷாக் ஆக்கியுள்ளது. 

    விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலின் மூலமாக சின்னத்திரைக்கு நடிகையாக அறிமுகமானவர் ஆல்யா மானசா. இவர் தன்னுடன் அதே சீரியலில் நடித்த சஞ்சீவை கல்யாணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அழகான பெண் குழந்தை ஒன்று உள்ளது. தற்போது  இரண்டாவது முறையாக கர்ப்பமான ஆல்யா சமீபத்தில் நடித்து வந்த ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலகினார். அதுமட்டுமில்லை, குழந்தை பிறந்த பிறகு 3 மாதம் ரெஸ்ட் எடுத்துவிட்டு ஆல்யா மீண்டும் வருவார் என ரசிகர்கள் எதிர்பார்க்க, இனிமேல் சந்தியாவாக வர மாட்டேன் எனவும் ஆல்யா கூறி இருந்தார்.

    எழிலை பற்றி இப்படியொரு பொய்யா? ராதிகாவை ஏமாற்றும் கோபி!

    இந்நிலையில், சீரியலைக்காட்டிலும் ஆல்யாவும் சஞ்சீவும் யூடியூப்பில் படு பிஸி. சொந்தமாக யூடியூப் சேனலை நடத்தி வரும் இவர்கள் லைக்ஸ், வியூஸ்களை அள்ளி வருகின்றனர். ஆல்யாவின் 2 வது கர்ப்பத்திற்கு பிறகு இவர்கள் பதிவிட்ட அனைத்து வீடியோக்களும் செம்ம வைரல். குறிப்பாக இவர்களின் மூத்த மகள் ஐலாவுக்கு சோஷியல் மீடியாவில் பயங்கரஃபேன்ஸ். இப்படி இருக்கையில், கடந்த மார்ச் 27ஆம் தேதி ஆல்யாவுக்கு 2வது குழந்தை பிறந்தது.

    சூப்பர் சிங்கர் பிரியங்காவுக்கு விஜய் டிவி செய்த காரியம்..இது நியாயமே இல்லை என சண்டை போடும் ரசிகர்கள்!

    மகனுக்கு ஹர்ஷ் எனவும் அவர்கள் பெயர் வைத்துள்ளனர். ஆல்யாவுக்கு 2வது டெலிவரியும் ஆப்ரேஷன் என்பதால் முதல் நாளே ஆல்யா குடும்பத்துடன் ஆஸ்பிட்டல் சென்றார். அங்கையும் யூடியூப் விலாகுக்காக சஞ்சீவ் வீடியோ எடுத்தார். அதில் ஆல்யாவுக்கு மருத்துவர்கள், டெஸ்ட் எடுத்தது, ஐலா பாப்பா விளையாடி கொண்டிருந்தது, டிவி யில் கயல் சீரியல் ஒளிப்பரப்பானது என்ன ஒவ்வொரு நிகழ்வுகளையும் சஞ்சீவ் வீடியோவில் பதிவு செய்து கொண்டிருந்தார்.



    அப்போது மறுநாள் காலை பிரசவ வார்டுக்கு ஆல்யா கிளம்புவதற்கு முன்பு லிப் பாம் கேட்டு ஆடம் பிடிக்கிறார். அதற்கு சஞ்சீவ், நீ ஆப்ரேஷனுக்கு போற பயமா இல்லையா? என கேட்க, அதற்கு ஆல்யா பயம் தான் ஆனாலும் லிப் பாம் வேணும் என அடம்பிடிக்கிறார். இதனால் சஞ்சீவுக்கு என்ன செய்வது என தெரியவில்லை, உடனே ஆல்யாவின் மாமியார் கையில் இருக்கும் moisturizery ஐ எடுத்து  வந்து ஆல்யாவின் உதட்டு, முகம் முழுவது தடவி ஆப்ரேஷன் வார்டுக்குஅனுப்பு வைக்கிறார். இந்த வீடியோ யூடியூப்பில் தற்போது ட்ரெண்டிங் வரிசையில் இடம்பிடித்துள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Alya Manasa, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி