ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

அம்மா- மகள் க்யூட் டான்ஸ்.. ஆல்யா மானசா பகிர்ந்த வீடியோவை பாத்தீங்களா?

அம்மா- மகள் க்யூட் டான்ஸ்.. ஆல்யா மானசா பகிர்ந்த வீடியோவை பாத்தீங்களா?

ஆல்யா மானசா

ஆல்யா மானசா

Alya Manasa : நடிகை ஆல்யா மானசா பகிர்ந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சன் டிவி, விஜய் டிவி, கலர்ஸ் தமிழ், ஜீ தமிழ் போன்ற பிரபல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடிக்கும் நடிகைகளுக்கு கூடுதலான வரவேற்பு மக்கள் மத்தியில் கிடைக்கிறது. அப்படி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் ஆல்யா மானசா.

  2017 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ராஜா ராணி சீரியலில் செம்பாவாக அறிமுகமானார். இந்த சீரியலில் ஆல்யாவுக்கு ஜோடியாக சஞ்சீவ் கார்த்திக் நடித்தார். சீரியலில் போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது.

  பின்னர் இந்த காதல் ஜோடி திருமணமும் செய்துக்கொண்டனர். முதல் குழந்தை பிறந்த பிறகு ஆல்யா மானசா உடல் எடையை குறைத்து ராஜா ராணி 2 சீரியலில் சந்தியாவாக என்ட்ரி கொடுத்தார்.ராஜா ராணி பாகம் ஒன்றிற்கு கிடைத்த வரவேற்பை விட இரண்டாம் பாகத்திற்கு கூடுதல் வரவேற்பு கிடைத்தது.ராஜா ராணி 2 சீரியல் விறுவிறுப்பாக சென்றுக்கொண்டிருந்த நேரத்தில் ஆல்யா இரண்டாவது முறை கர்ப்பமானார்.9 மாதங்கள் வரை சீரியலில் நடித்த ஆல்யா சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

  ஆல்யா - சஞ்சீவ் தம்பதிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து 6 மாதங்கள் ஆன நிலையில் ஆல்யா மானசா உடல் எடையை குறைத்து மீண்டும் சீரியலில் என் ட்ரி கொடுக்க தயாராகி வருகிறார். ஆல்யா, சஞ்சீவ் சொந்தமாக யூடியூப் சேனல் நடத்தி வருகின்றனர். இன்ஸ்டாகிராமிலும் ஆக்டிவாக அடிக்கடி வீடியோக்களை பகிர்ந்து வருவார்கள்.
   
  View this post on Instagram

   

  A post shared by alya_manasa (@alya_manasa)  தற்போது ஆல்யா மானசா தனது மகள் ஐலாவுடன் டான்ஸ் ஆடும் வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில் ஐலா அப்படியே தனது அம்மாவை பார்த்து க்யூட்டாக டான்ஸ் ஆடுகிறார்.இந்த வீடியோவுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.

  Published by:Tamilmalar Natarajan
  First published:

  Tags: Album, Alya Manasa, Photo Gallery