ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கஷ்டத்தில் காரை விற்ற ஆல்யா கணவர் சஞ்சீவ்.. பலருக்கும் தெரியாத உண்மை!

கஷ்டத்தில் காரை விற்ற ஆல்யா கணவர் சஞ்சீவ்.. பலருக்கும் தெரியாத உண்மை!

சஞ்சீவ் - ஆல்யா

சஞ்சீவ் - ஆல்யா

பெட்ரோல் கூட போட பணம் இல்லாமல் கஷ்டப்பட்டாராம். அந்த நேரத்தில் வாங்கிய காரை கூட விற்று விட்டாராம்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சின்னத்திரை ஜோடி ஆல்யா - சஞ்சீவ் சமீபத்தில் அளித்திருக்கும் பேட்டி யூடியூப்பில் பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

  சின்னத்திரையில் ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்ட ரீல் ஜோடி என்றால் அது ராஜா ராணி சீரியல் செம்பா - கார்த்திக். சீரியலில் ரீல் ஜோடிகளாக நடித்த இவர்கள் பின்பு ரியல் லைஃபிலும் இணைந்தனர். ராஜா ராணி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும்போதே, இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.இதையடுத்து, ஆல்யா கர்ப்பமானார். ஆல்யாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. இருவரும் தங்கள் குழந்தைக்கு ஐலா என்று பெயர் வைத்தனர். திருமணத்துக்கு பிறகு, சஞ்சீவ் , விஜய் டிவியில் காற்றின் மொழி சீரியலில் நடித்து வந்தார். அந்த சீரியல் முடிந்த பிறகு, சன் டிவியில் தொடங்கப்பட்ட சீரியலான கயல் சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியல் டி.ஆர்.பியில் கலக்கி வருகிறது.

  ஜிபி முத்து முகத்துல அப்படியொரு சந்தோஷம்.. மனைவி, குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடினார்!

  அதே போல் ஆல்யாவும் ராஜா ராணி 2 சீரியல் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். அதில் பிஸியாக நடித்தார். பின்பு மீண்டும் கர்ப்பம் ஆனதால் சீரியலில் இருந்து விலகினார். 2வது அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. 6  மாதம் கடந்து விட்டதால்  கம்பேக் கொடுக்க ரெடி ஆகிவருகிறார். கூடிய விரைவில் ஆல்யாவை சன் டிவியில் புது சீரியலில் பார்க்கலாம் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஆல்யா - சஞ்சீவ் இருவரும் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தனர். அந்த பேட்டியை எடுத்தவர் கலா மாஸ்டர்.

  சஞ்சீவ் - ஆல்யா இருவரையும் சின்னத்திரையில் அறிமுகம் செய்தவர் கலா மாஸ்டர். அவர் எடுக்கும் சிறப்பு பேட்டியில் ஆல்யாவும் சஞ்சீவும் குழந்தை ஐலா பாப்பாவுடன் கலந்து கொண்டு பல விஷயங்களை ஷேர் செய்துள்ளனர். அப்போது ஆரம்பகால வாழ்க்கையை பற்றி பதிவு செய்து இருக்கும் சஞ்சீவ் ஆட்டம் பாட்டம் நிகழ்ச்சியில் இருக்கும் போது பெட்ரோல் கூட போட பணம் இல்லாமல் கஷ்டப்பட்டாராம். அந்த நேரத்தில் வாங்கிய காரை கூட விற்று விட்டாராம். இதை சொல்லும் போது கண்கலங்கி அழுது விடுகிறார் சஞ்சீவ்.

  அண்ணாந்து பார்க்க வைக்கும் வளர்ச்சி.. வெளிநாட்டில் செந்தில் - ராஜலட்சுமி ஜோடி!

  அதன் பின்பு தான்  ராஜா ராணி சீரியல் வாய்ப்பு வர அவர்  லைஃபே மாறிவிட்டது என கூறியுள்ளார். அதே போல் ஆல்யா வந்த பின்பு இருவரின் வருமானம் வர தொடங்கியதும் கார், வீடு, பங்களா என செட்டில் ஆகிவிட்டதாக கூறியுள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Alya Manasa, TV Serial, Vijay tv