Home /News /entertainment /

போட்டி போட்டு புதிய படங்களை ஒளிபரப்பும் சேனல்கள்... ஜீ தமிழில் இந்த வாரம் என்ன படம் தெரியுமா?

போட்டி போட்டு புதிய படங்களை ஒளிபரப்பும் சேனல்கள்... ஜீ தமிழில் இந்த வாரம் என்ன படம் தெரியுமா?

தலைவி

தலைவி

ஆண்டுதோறும் ஒவ்வொரு பண்டிகை காலத்திலும் தொலைக்காட்சி சேனல்களில் புத்தம் புதிய படங்கள் ஒளிபரப்பப்படுவது வழக்கம்.

    ஒவ்வொரு தொலைக்காட்சி சேனல்களும் தங்களது டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்த பல சீரியல்கள் ஒளிபரப்பட்டு வருகின்றன. சீரியல்களை தவிர்த்து வார இறுதி நாட்களில் பல ரியாலிட்டி ஷோக்களும், பிளாக் பஸ்டர் படங்களும் ஒளிபரப்படுவது வழக்கம். மேலும், ஒவ்வொரு சேனல்களும் பல புதிய படங்களை ஒளிபரப்புவதும் வழக்கம். அந்த வகையில் ஜனவரி 9ம் தேதி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சமீபத்தில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படமான "தலைவி" ஒளிபரப்பபடுகிறது.

    ஏ.எல். விஜய் இயக்கத்தில், கங்கனா ரணவத், அரவிந்த்சாமி, நடிப்பில் கடந்த மாதம் 10ஆம் தேதி வெளியான படம் 'தலைவி'. இந்த படம் மறைந்த முதலமைச்சர், நடிகை ஜெயலலிதாவின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட படமாகும். இப்படத்தில் ஜெயலலிதாவாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் மற்றும் எம். ஜி.ஆர்-ஆக அரவிந்த் சாமியும் நடித்திருந்தனர். 1989ம் ஆண்டு மார்ச் மாதம் 25ம் தேதி தமிழக சட்டசபையில் ஜெயாவின் (கங்கனா ரனாவத்)சேலையை பிடித்து இழுத்து மானபங்கப்படுத்துவதுடன் படம் துவங்குகிறது.

    தமிழக முதல்வரான பிறகே சட்டசபையில் கால் வைப்பேன் என்று சபதம் செய்கிறார் ஜெயா. ஜெயா, எம்.ஜே.ஆர். இடையேயான உறவு தான் படத்தின் இதயம் என்றால், எம்.ஜே.ஆரின் வலதுகரமான ஆர்.என்.வி.யின்(சமுத்திரக்கனி) மரியாதையை ஜெயா பெறுவது தான் படத்தின் உயிர். ஜெயாவின் வாழ்க்கையை அப்படியே காட்டாமல் அவரின் சாதனைகளை காட்டியிருக்கிறார் இயக்குனர். திரையரங்கில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் தற்போது வரும் ஜனவரி 9ஆம் தேதி முதல் முறையாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. இந்த திரைப்படம் வரும் ஞாயிறு மதியம் 3.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது.

    ஆண்டுதோறும் ஒவ்வொரு பண்டிகை காலத்திலும் தொலைக்காட்சி சேனல்களில் புத்தம் புதிய படங்களை ஒளிபரப்புவது வழக்கம். மேலும், அன்றைய தினம் பல நட்சத்திர கொண்டாட்ட நிகழ்ச்சி, பட்டிமன்றம், நேர்காணல் என பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்படும். அதிலும் ஒவ்வொரு சேனல்களும் போட்டிபோட்டு கொண்டு புதிய படங்களை திரையிடுவர்.

    அந்த வகையில் தமிழர் பண்டிகையாம் பொங்கல் பண்டிகையின் போதும் அனைத்து தொலைக்காட்சி சேனல்களும் புதிய படங்களை வெளியிடவுள்ளனர். பொங்கல் பண்டிகை வருகிற ஜனவரி 13ம் தேதி ஆரம்பித்து ஜனவரி 16ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. அதிலும் குறிப்பாக பொங்கல் மற்றும் மாட்டுப்பொங்கல் தினத்தன்று பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்படும். இந்த நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தலைவி ஒளிபரப்படுகிறது. இந்த நிலையில், பொங்கலுக்கு என்ன திரைப்படம் ஒளிபரப்பப்படும் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இதனிடையே சன் டிவி-யில் பொங்கலுக்கு அண்ணாத்த திரைப்படம் ஒளிபரப்பாகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Zee Tamil Tv

    அடுத்த செய்தி