• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பிக் பாஸ் அக்‌ஷரா ரெட்டி அந்த படத்தோட ஹீரோயினா? சொல்லவே இல்லை!

பிக் பாஸ் அக்‌ஷரா ரெட்டி அந்த படத்தோட ஹீரோயினா? சொல்லவே இல்லை!

அக்‌ஷரா ரெட்டி

அக்‌ஷரா ரெட்டி

அக்ஷரா ரெட்டி நடித்துள்ள இந்த படத்தின் போஸ்டர் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • Share this:
    விஜய் டிவியின் மிக பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது சீசன் 5 வரை வந்துள்ளது. இந்த சீசன் 5 நிகழ்ச்சியானது 50 நாட்களை கடந்து வெற்றி நடைபோடுகிறது. இதில் தற்போது வரை 6 போட்டியாளர்கள் வெளியேறி உள்ளனர். இந்நிலையில் மீதமுள்ள 12 போட்டியாளர்களில் ஒரு சிலர் மட்டுமே பார்வையாளர்களின் மனதை கவர்ந்துள்ளனர். இவர்களில் சிலருக்கு பிக் பாஸ் ஓவியா ஆர்மியை போன்ற பலமான ஆர்மிகள் சமூக ஊடகங்களில் உருவாகி வருகிறது.

    அந்த வகையில் தற்போது சீசன் 5 நிகழ்ச்சியில் உள்ள போட்டியாளர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் அதிகம் பிடித்த அக்ஷரா ரெட்டி பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் சமூக ஊடங்கங்களில் வைரலாகி வருகிறது. இளம் வயதிலேயே மாடலிங் துறையில் தனக்கான அங்கீகாரத்தை உருவாக்கி கொண்டவர் இவர். ஏராளமான மாடலிங் போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பான பட்டங்களை பெற்றுள்ளார்.

    2019 ஆம் ஆண்டு உலகளவில் நடைபெற்ற மாடலிங் போட்டியில் கலந்து கொண்டு 'மிஸ் குளோப் 2019' என்கிற பட்டத்தை இந்தியா சார்பில் இவர் பெற்றுள்ளார். அந்த வகையில் தற்போது பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பல ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளார். ஏற்கனவே இவருக்கு சமூக வலைத்தளங்களில் பல்வேறு ஆர்மிகளை இவரின் ரசிகர்கள் உருவாக்க தொடங்கிவிட்டனர்.

    பிக் பாஸ் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளர்களுக்கும் அக்ஷரா ரெட்டி மிகவும் பிடித்தமானவர். அதிலும் குறிப்பாக பிக் பாஸ் போட்டியாளர் ராஜு ஜெயமோகனுக்கு மிக பிடித்த போட்டியாளர் இவர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு முறை அக்ஷராவை 'இந்த காலத்து அமலா' என்றே இவர் செல்லமாக கூறியுள்ளார்.

    இவரை முதன்முதலில் பிக் பாஸ் சீசனில் பார்த்த பலருக்கும் இவர் யார் என்றே தெரியாதவாறு நிச்சயம் இருந்திருக்கும். வில்லா டூ வீடு என்கிற விஜய் டிவியின் முந்தைய நிகழ்ச்சியின் மூலம் தான் அக்ஷரா ரெட்டி விஜய் டிவியில் முதன்முதலில் அறிமுகமானார். அதில் பங்கேற்றதோடு இல்லாமல் 2 ஆவது இடத்தை பிடித்து வெற்றியும் பெற்றுள்ளார். இவர் இதுவரை திரைப்படங்கள் எதிலும் நடிக்கவில்லை என்று பலர் நினைத்திருப்பீர்கள். ஆனால் அது உண்மை கிடையாது.

    அக்ஷரா ரெட்டி 2006 ஆம் ஆண்டிலேயே ஹீரோயினாக ஒரு தமிழ் படத்தில் நடித்துள்ளார். அக்ஷராவின் ரசிகர்களுக்கு இந்த தகவல் நிச்சயம் ஆச்சரியமாக இருக்கக் கூடும். ஆம், இவர் 'தீண்ட தீண்ட' என்கிற திரைப்படத்தில் தான் முதன்முதலில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். இந்த தகவல் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அக்ஷரா ரெட்டி நடித்துள்ள இந்த படத்தின் போஸ்டர் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    பாண்டியன் ஸ்டோர்ஸ்: என்னங்க சார் உங்க சட்டம்? கண்ணன் காதலுக்கு எதிர்ப்பு தமிழ் காதலுக்கு உதவியா?

    எது எப்படியோ, அக்ஷரா ரெட்டி பிக் பாஸில் இருந்து வெளியேறினாலும் நிச்சயம் அவருக்கு ஏராளமான புதிய பட வாய்ப்புகள் காத்திருக்கிறது என்றே சொல்லலாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: