பிக் பாஸ் 5ல் பலரின் கவனத்தையும் பெற்று வரும் அக்ஷராரெட்டி பற்றி உலா வரும் சர்ச்சைகள் குறித்து ஒரு பார்வை.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் அக்டோபர் 3ம் தேதி தொடங்கியது. கடந்த 4 சீசன்களையும் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், இந்த சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசனில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் துபாயில் நடைபெற்ற மிஸ் குளோப் 2019 அழகிப் போட்டியில் பிரபஞ்ச அழகி பட்டம் பெற்ற அக்ஷரா ரெட்டியும் ஒருவர். தற்போது பிக் பாஸ் வீட்டில் விளையாடி கொண்டிருக்கும் அக்ஷரா இதுவரை பலமுறை நிகழ்ச்சியில் அழுது விட்டார். ஆரம்பத்தில் இருந்தே இவருக்கும் பாவனிக்கும் செட் ஆகவில்லை. இருவரும் மாமியார் மருமகள் போல் சண்டை போட்டு கொள்கின்றனர். அக்ஷரா சொன்ன கதைக்கு ராஜூ பாய் லைக் போட்டதும் மிகப் பெரிய சலசலப்பை வீட்டில் ஏற்படுத்தியது. இப்போது வரை பிக் பாஸ் வீட்டில் அக்ஷரா நெருக்கமாக இருப்பது சின்ன பொண்ணு, வருண், ராஜு பாயுடன் மட்டும் தான்.
இணையதளங்களில் இவருக்கு ஃபேன்ஸ் பட்டாளமும் அதிகரித்துள்ளது. அக்ஷராவுக்கு ஆர்மி பக்கங்களும் தொடங்கப்பட்டுள்ளன. ஆனாலும் இவர் குறித்த சர்ச்சைகள் பல வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடந்த சில வாரங்களாக மலையாள நியூஸ் சேனல்களுக்கு அக்ஷரா அளித்த பேட்டி வைரலாகி வருகிறது. 2013 ஆம் ஆண்டு கேரளாவில் தங்கக் கடத்தல் வழக்கு மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதில் ஸ்ராவ்யா சுதாகர் என்ற பெண்ணின் பெயர் அடிப்பட்டது அவர் தான் இப்போது அக்ஷரா ரெட்டி என்று பெயர் மாற்றி பிக் பாஸில் பங்கேற்றுள்ளதாக தகவல்கல் பரவின. அதே நேரம் விஜய் டிவியில் சில ஆண்டுகளுக்கு முன்பு நடைப்பெற்ற வில்லா டூ வில்லேஜ் என்ற ரியாலிட்டி ஷோவிலும் அக்ஷரா ரெட்டி இதே பெயரில் தான் பங்கேற்று இருந்தார்.
கொஞ்சம் கூட சுவாரசியமே இல்லை.. ஹவுஸ்மேட்ஸை அசிங்கப்படுத்திய பிக் பாஸ்! ஏன் இப்படி?
அதன் பின்பு 2019-ம் ஆண்டு நடந்த `மிஸ் குளோப் வேர்ல்டு' அழகிப் போட்டியில் அக்ஷரா என்ற பெயரில் கலந்துகொண்டு மிஸ் குளோப் வேர்ல்டு பட்டத்தையும் பெற்றுள்ளார் அக்ஷரா.தங்க கடத்தல் வழக்கில் இவரின் பெயர் சிக்கியதும் உண்மை தான். இவரின் மாடலிங் பி.ஆர்.ஓவிடம் போலீசார் விசாரிக்கும் போது அவரின் நண்பரான அக்ஷராவிடமும் போலீசார் விசாரனை நடத்தினர். அதே போல் அக்ஷரா ஃபேஸ் சர்ஜரி செய்து கொண்டதாகவும் செய்திகள் உலாவின. ஆனால் அவர் உடல் எடையை கணிசமாக குறைத்து முக தோற்றத்தை மாற்றியதாக அவரின் நண்பர்கள் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளனர்.
View this post on Instagram
சொல்லப்போனால் பிக் பாஸ் வீட்டில் அக்ஷரா எந்த சர்ச்சையிலும் இதுவரை சிக்கவில்லை. ஆனால் வெளியில் அவர் குறித்த பல சர்ச்சைகள் இணையதளங்களில் உலா வந்து கொண்டிருக்கின்றன.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bigg Boss Tamil 5, Vijay tv