பாரதி கண்ணம்மா சீரியலுக்கு ‘குட் பை’ சொன்ன அகில்... சோகத்தை வெளிப்படுத்திய அஞ்சலி!

அகில் - அஞ்சலி

’பாரதி கண்ணம்மா’ சீரியலில் அகில் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் அகிலன் அந்த சீரியலில் இருந்து விலகியிருக்கிறார்.

  • Share this:
    பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து அகிலன் வெளியேறியது குறித்து இன்ஸ்டாகிராமில் தனது சோகத்தை வெளிப்படுத்தியுள்ளார் கண்மணி மனோகரன்.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கண்ணம்மாவை காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறான் பாரதி. அவர்கள் வாழ்க்கையில் விளையாடி இருவரையும் பிரித்து விடுகிறாள் வெண்பா.

    Vijay TV Bharathi Kannamma Akil quits the serial, bharathi kannamma, bharathi kannamma today episode, bharathi kannamma live streaming, Vijay TV Bharathi Kannamma Serial, baharathi kannamma Latest Update, bharathi kannamma hotstar, பாரதி கண்ணம்மா சீரியல், விஜய் டிவி பாரதி கண்ணம்மா, பாரதி கண்ணம்மா சீரியல் ப்ரோமோ, Bharathi Kannamma akilan, Bharathi Kannamma akilan quits, Bharathi Kannamma akil anjali, akil anjali, பாரதி கண்ணம்மா அகில், பாரதி கண்ணம்மா அகிலன், அகில் அஞ்சலி, bharathi kannamma akilan instagram, bharathi kannamma akilan wife, bharathi kannamma akilan girlfriend, bharathi kannamma akilan marriage, akilan spr
    அஞ்சலி இன்ஸ்டாகிராம் ஸ்டோரி


    கண்ணம்மாவுக்கு பிறந்த இரட்டை குழந்தையில் கறுப்பாக பிறந்த ஹேமாவை மாமியார் செளந்தர்யா தூக்கிச் சென்று வளர்த்து வருகிறார். இன்னொரு குழந்தை லட்சுமி கண்ணம்மாவிடம் வளர்கிறது. தன் மகள் என்று தெரியாமலேயே ஹேமா மீது உயிராக இருக்கிறான் பாரதி. குழந்தைகளுடன் பாரதியும், கண்ணம்மாவும் எப்போது இணைவார்கள் என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில் ’பாரதி கண்ணம்மா’ சீரியலில் அகில் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் அகிலன் அந்த சீரியலில் இருந்து விலகியிருக்கிறார். நேற்றைய எபிசோடோடு அகிலன் அந்த சீரியலுக்கு விடை கொடுத்திருப்பதாக தெரிகிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாக, ‘எங்களின் கடைசி ஃப்ரேம்’ என அகில் - அஞ்சலியின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார் பாரதி கண்ணம்மா சீரியலில் அஞ்சலியாக நடித்து வரும் கண்மணி மனோகரன்.

    அதோடு ‘முதல் நாள் முதல் காட்சிக்கு டிக்கெட் கிடைக்குமா?’ என்றும் அகிலனிடம் கேட்டுள்ளார். இதிலிருந்து அகிலன் சினிமாவில் நடிப்பதற்காக சீரியலுக்கு குட் பை சொல்லியிருப்பதாக புரிந்துக் கொள்ள முடிகிறது. பாரதி கண்ணம்மா சீரியலில் அகில் - அஞ்சலி ஜோடிக்கென தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இதிலிருந்து அகில் விலகுவதை சோகத்துடன் பதிவிட்டு வருகிறார்கள் ரசிகர்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: