Home /News /entertainment /

விரைவில் டிவியில் ஒளிபரப்பாக உள்ள அஜித்தின் 'வலிமை' திரைப்படம் - எப்போது? எந்த சேனலில்?

விரைவில் டிவியில் ஒளிபரப்பாக உள்ள அஜித்தின் 'வலிமை' திரைப்படம் - எப்போது? எந்த சேனலில்?

அஜித்

அஜித்

Ajith Valimai Movie | ரூ.150 கோடி பட்ஜெட்டில் தயாரான வலிமை படம் தமிழ் நாட்டில் மட்டுமே 100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாகவும், உலகளவில் 250 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி வசூலில் பட்டையை கிளப்பிய அஜித் குமாரின் 'விஸ்வாசம்' மற்றும் 'நேர்கொண்ட பார்வை' திரைப்படங்களுக்கு பிறகு, கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் கழித்து வெளியான திரைப்படம் தான்  வலிமை.

நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித் குமார், இயக்குனர் எச் வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் ஆகிய மூவரும் மீண்டும் கூட்டணி அமைக்க 'வலிமை' திரைப்படத்தின் டைட்டில் மட்டுமே கொஞ்சம் சுறுசுறுப்பாக வெளியிடப்பட்டது. அதன் பிறகு வலிமை திரைப்படம் பற்றி பெரிய அளவில் எந்தவிதமான அப்டேட்டுமே வெளியிடப்படவில்லை; இது அஜித் ரசிகர்களை கடும் கோபத்திற்குள் ஆழ்த்தியது.

"போனி கபூர் சார்! ஒரு போட்டோவாச்சும் ரிலீஸ் பண்ணுங்களேன்!" என்கிற அளவுக்கு இறங்கி வந்த அஜித் ரசிகர்கள், வலிமை ட்ரெய்லர் ரிலீஸ் ஆனதும் வானத்திற்கும் பூமிக்கும் குதித்தனர் என்றே கூறலாம். வலிமை - முழுக்க முழுக்க 'ஆக்ஷன் பேக்' திரைப்படம் என்பதை அதன் ட்ரெய்லரை பார்த்த எவரும் கூறுவர்.

also read : கவின் உடன் பிரேக்-அப் ஆக இதுதான் காரணம்.. உண்மையை உடைத்த லாஸ்லியா!

படமும் அப்படியே தான் இருந்தது. முதல் நாள் முதல் ஷோவில் இருந்தே அஜித் ரசிகர்கள் வலிமை படத்தையும், படத்தில் இடம்பெற்ற பைக் ஆக்ஷன் காட்சிகளையும் கொண்டாடி வருகின்றனர். இருப்பினும் வழக்கம் போல (எந்தவொரு பெரிய பட்ஜெட், பெரிய ஹீரோ படத்தை போல) வலிமை திரைப்படமும் சில கலவையான விமர்சனங்களை பெற்றது.



 

ஆனால் வசூலை பொறுத்தவரை, இந்த வருடத்தின் முதல் சூப்பர் ஹிட் தமிழ் திரைப்படம் வலிமை தான் என்பதில் சந்தேகமே வேண்டாம். படம் ரிலீஸ் அனைத்து இடங்களிலும் வசூலில் எந்த குறையும் இல்லை. சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் தமிழ் நாட்டில் மட்டுமே 100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாகவும், உலகளவில் 250 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

also read : மூத்த பாடகருடன் இசை கச்சேரியில் பாட உள்ள சிவாங்கி.. வைரலாகும் இன்ஸ்டா போஸ்ட்

வலிமை படத்தின் கதை, அஜித் உடன் நடித்த சக நடிகர்களை தாண்டி ஏ.கே-வின் பைக் ரேஸ் மற்றும் ஸ்டண்ட் காட்சிகள் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டன. அஜித் குமாரின் வலிமை திரைப்படம் திரையரங்குகளில் வெளியானதோடு நில்லாமல் ஓடிடி தளத்திலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கிடையில் தற்போது கிடைத்துள்ள ஒரு புதிய தகவலின்படி வலிமை திரைப்படம் கூடிய விரைவில் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாக உள்ளதாம்.

valimai booking ajith hvinoth combo valimai

மிகவும் எதிர்பார்க்கப்பட்டபடியே வலிமை திரைப்படம் ஜீ தமிழ் சேனலில் தான் ஒளிப்பரப்பப்படவுள்ளது. ஏனெனில் வலிமை படத்தின் ஓடிடி உரிமத்தை கைவசம் கொண்டுள்ளதும் ஜீ5 தான். வெளியான தகவலின்படி, வலிமை திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி அதாவது நடிகர் அஜித் குமாரின் பிறந்தநாள் அன்று ஜீ தமிழ் சேனனில் ஒளிபரப்பாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆகமொத்தம் அஜித் ரசிகர்களுக்கு ட்ரிபிள் ட்ரீட்!

 
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Actor Ajith, Valimai, Zee tamil

அடுத்த செய்தி