மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை சீசன் 4ல் கலந்து கொண்ட சூப்பர் சிங்கர் பிரபலம் அஜய் கிருஷ்ணா - ஜெஸி ஜோடி முதல் நபராக நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளனர்.
விஜய் டிவியில் சூப்பர் சிங்கரில் இருந்து ஸ்டார்ட் மியூசிக் சென்ற பிரபல தான் அஜய் கிருஷ்ணா.தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்து இருக்கும் அஜய் கிருஷ்ணா சின்னத்திரை மற்றும் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.
பிரபல சினிமா பாடகர் உதித் நாராயணன் குரலில் பல பாடல்களை பாடி அசத்திய அஜய் கிருஷ்ணா தன் சொந்த குரலிலும் அற்புதமாக பாடும் திறன் கொண்டவர்.பெரிய அளவில் சினிமாவில் பாடும் வாய்ப்புகளை பெறவில்லை என்றாலும் கூட, கோமாளி திரைப்படத்தில் ஒளியும் ஒலியும் பாடலை பாடி உள்ளார். தொடர்ந்து விஜய் டிவி மற்றும் சின்னத்திரை இசை சார்ந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார்.
சூர்யா மீது க்ரஷ்.. சிம்புவையும் பிடிக்கும்! ஓப்பனாக பதிலளித்த நடிகை அமலா பால்
இவருக்கு சமீபத்தில் தான் ஜெஸி என்ற பெண்ணுடன் இந்து, கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடைப்பெற்றது. இவர்களது திருமணம் ஒரு காதல் திருமணம் ஆகும். இந்த ஜோடியின் திருமணம், வரவேற்பு நிகழ்ச்சி என பல வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின, அந்த வகையில் இவர்கள் இருவரும் ஜோடியாக அளித்த சில பேட்டிகளும் இணையத்தில் லைக்ஸ்களை அள்ளியது. சமூகவலைத்தளத்தில் இந்த ஜோடிக்கு இருக்கும் வரவேற்பை பொறுத்து இவர்களை மிஸ்டர் அண்ட் மிஸஸ் சீசன் 4ல் விஜய் டிவி களம் இறக்கியது.
ரசிகர்களை நம்பி களத்தில் குதித்த பிக் பாஸ் அக்ஷரா!
திருமணம் முடிந்து 45 நாட்களில் இவர்கள் பெரும் நம்பிக்கையுடன் இளம் ஜோடியாக இந்த போட்டியில் களம் இறங்கினர். இந்த நிகழ்ச்சியில் இவர்களை தவிர மீதம் இருக்கும் 9 ஜோடிகளும் திருமணம் ஆகி பல ஆண்டுகள் புரிதலுடன் வாழ்ந்து வருபவர்கள். அவர்களுடன் போட்டிப்போட அஜய் - ஜெஸி ஜோடி தைரியமாக இறங்கி முதல் 2 சுற்றுக்களை சூப்பராக விளையாடினர்.
இந்நிலையில் திடீரென்று இருவரும் போட்டியில் இருந்து பாதியிலே விலகியுள்ளனர். இந்த தகவலை நடுவர் தேவதர்ஷினி நிகழ்ச்சி மேடையில் அறிவித்தார். பல தனிப்பட்ட காரணங்களால் இருவரும் நிகழ்ச்சியை விட்டு சென்றதாகவும் அவர் கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இதுக் குறித்து அஜய் - ஜெஸி தரப்பில் எந்த விளக்கமும் தரப்படவில்லை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.