மனைவியுடன் சின்னத்திரைக்கு வரும் ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரர்

குடும்பத்துடன் ஐஸ்வர்யா ராஜேஷ்

ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரர் மணிகண்டன் விஜய் டிவியின் மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ள உள்ளார்.

  • Share this:
விஜய் டிவியில் சமீபத்தில் குக்வித் கோமாளி நிகழ்ச்சி முடிவடைந்தது. இந்நிலையில் ஏப்ரல் 24-ம் தேதி முதல் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை சீசன் 3 ஒளிபரப்பாக இருக்கிறது. இதில் சின்னச்சித்தரை பிரபலங்கள் தங்கள் வாழ்க்கைத்துணையுடன் ஜோடியாக பங்கேற்கப்போகிறார்கள்.

தம்பதிகளின் மனம் மற்றும் அவரவர் துணையை புரிந்துகொண்டிருப்பதன் அடிப்படையில் அவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் நிகழ்ச்சி விறுவிறுப்பான போட்டிகளுடன் ஆட்டம் பாட்டத்துடன் களைகட்டும் என்றும் விஜய் டிவி தெரிவித்துள்ளது.

இந்நிகழ்ச்சியில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரும், சின்னத்திரை நடிகருமான மணிகண்டன் தனது மனைவி சோபியாவுடன் கலந்து கொள்கிறார். மணிகண்டன் வெற்றிபெற வேண்டும் என்று ஐஸ்வர்யாராஜேஷின் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை சீசன் 3 நிகழ்ச்சியில் ராஜ்மோகன் - கவீதா, கோபாலகிருஷ்ணன் - ஹரிதா, சங்கர் - தீபா, யுவராஜ் - காயத்ரி, வேல்முருகன் - கலா, வினோத்குமார் - ஐஸ்வர்யா, சரத்குமார் - கிருத்திகா, யோகேஷ் - நந்தினி, மணிகண்டன் - சோபியா, திவாகர் - அபினயா, ஜாக் -ரோஷினி, அஜய் குமார் - ஆனந்தி ஆகிய ஜோடிகள் கலந்து கொள்கின்றன.

இந்த நிகழ்ச்சியை மா.கா.பா ஆனந்த் மற்றும் அர்ச்சனா தொகுத்து வழங்குகிறார்கள். நிகழ்ச்சியின் நடுவர்கள் நீயா நானா கோபிநாத் மற்றும் தேவதர்ஷினி ஆகியோர் பங்கேற்கின்றனர்.
Published by:Sheik Hanifah
First published: