Home /News /entertainment /

விஜய் டிவி சீரியல் பிரபலத்தின் அக்கா அந்த நடிகையா? ஆச்சரியப்படும் ரசிகர்கள்!

விஜய் டிவி சீரியல் பிரபலத்தின் அக்கா அந்த நடிகையா? ஆச்சரியப்படும் ரசிகர்கள்!

ஐஸ்வர்யா ராம்சாய்

ஐஸ்வர்யா ராம்சாய்

இயக்குனர் திருமுருகன் சீரியல்  மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தவர் '

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதிதாசன் காலணி சீரியல் ஹீரோயின் ஐஸ்வர்யா ராம்சாயின் அக்கா யார் தெரியுமா? அவரும் பிரபல சீரியல் நடிகை தான்.

    நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் முடிந்த பின்பு புதியதாக தொடங்கப்பட்ட தொடர் 'பாரதிதாசன் காலனி' . காலணியில் குடி இருப்பவர்களை சுற்றி நகரும் கதை தான் இந்த பாரதிதாசன் காலனி. இந்த சீரியலில் லீட் ரோலில் நடிப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராம்சாய். இவர் தமிழ் மற்றும் மலையாளத்தில் நடித்து வருகிறார். மலையாளத்தில் மெளன ராகம் என்ற சீரியலில் நடித்tது புகழடைந்தார். அதே போல் தமிழில் இதற்கு முன்பு திருமுருகன் இயக்கிய கல்யாண வீடு சீரியலில் ரேவதியாக நடித்து இருந்தார். 23 வயதாகும் ஐஸ்வர்யா ராம்சாய் இணையத்தில் படு வைரல்.

    மீண்டும் பழைய இடத்திற்கு சென்ற பிக் பாஸ் அர்ச்சனா!

    இவரின் இன்ஸ்டா பக்கத்தை லட்சக்கணக்கான ஃபாலோவர்ஸ் பின் தொடர்கின்றனர். இவர் வெளியிடும் வீடியோ, புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவியும். சமீபத்தில் துபாய் சென்று இருந்த ஐஸ்வர்யா, தனது அக்காவுடன் சேர்ந்து வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது.



     




    View this post on Instagram





     

    A post shared by Aishwarya-ramsai (@aishwaryaramsai)






    இவரின் அக்கா வேற யாருமில்லை நாதஸ்வரம் சீரியல் புகழ் மகா தான். இவரின் நிஜப்பெயர் கீதாஞ்சலி. இயக்குனர் திருமுருகன் சீரியல்  மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தவர் 'வாணி ராணி', 'கல்யாண வீடு' மற்றும் விஜய் டிவியின் 'ராஜா ராணி' தொடரிலும் நடித்து வந்தார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Aishwarya-ramsai (@aishwaryaramsai)






    திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கு பாய் சொல்லிவிட்டார். கணவருடன் துபாயில் செட்டில் ஆகிவிட்டார். அவரின் தங்கையான ஐஸ்வர்யா இப்போது சீரியலில் நடித்து வருகிறார். இவர்களின் புகைப்படங்கள், வீடியோக்களை பார்த்த ரசிகர்கள் இருவரும் அக்கா தங்கையா? என ஆச்சரியத்துடன் கேட்டு வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Sun TV, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி