Home /News /entertainment /

சின்னத்திரையில் ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணி சோபியா என்ட்ரி!

சின்னத்திரையில் ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணி சோபியா என்ட்ரி!

சோபியா

சோபியா

சூப்பர் மாம் சீசன் 3 நிகழ்ச்சியில் சோபியா தனது மகனுடன் கலந்து கொள்ள இருக்கிறார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணி சோபியா ஜீ தமிழில் சூப்பர் மாம் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

    2012 ஆம் ஆண்டு வெளிவந்த அட்டகத்தி படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் சோபியா. இந்த படத்தின் ஒரு காட்சியில் திவ்யா, நதியா என்று இரண்டு பெண்கள் நடித்திருப்பார்கள். அந்த காட்சியில் திவ்யா என்ற கதாபாத்திரத்தில் சோபியா நடித்து இருந்தார். அவரின் சொந்த தங்கையே நதியாவாக நடித்து இருந்தார். இந்த படத்திற்கு பிறகு சோபியாவுக்கு வாய்ப்புகள் குவிய தொடங்கின. கலைஞர் டிவியில் மானாட மயிலாட நிகழ்ச்சியிலும் கலந்துக் கொண்டார்.

    இன்னும் 2 மாதத்தில் சீரியலில் நடிக்க வரும் ஆல்யா.. எந்த சேனலில் தெரியுமா?

    டான்ஸரான இவர் ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் மணிகண்டனை கரம் பிடித்தார். இந்த ஜோடிக்கு 4 வயதில் மகனும் இருக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன், சீரியல்களில் நடித்து இருக்கிறார். இவரும் டான்ஸர் தான். வள்ளி, கேளடி கண்மணி, அழகு சீரியல்களில் நடித்துள்ளார். அதே போல் சோபியாவும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ‘லட்சுமி’ படத்திலும் நடன ஆசிரியராக நடித்துள்ளார் .

    அப்படியொரு வளர்ச்சி.. சூப்பர் சிங்கர் ’பூவையார்’ இப்ப என்ன செய்கிறார் தெரியுமா?

    மணிகண்டனும் சோபியும் கடந்த ஆண்டு ஒளிப்பரப்பான மிஸ்டர் & மிஸஸ் ஷோவில் கலந்து கொண்டனர். பின்பு தனிப்பட்ட காரணங்களால் இருவரும் அந்த நிகழ்ச்சியை விட்டு பாதியில் விலகினர். இடையில் சோபியா தனியாக யூடியூப் சேனல் தொடங்கி அதன் மூலம் பல வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Tamil Serials (@tamilserialexpress)






    இந்நிலையில் சின்ன இடைவெளிக்கு பிறகு மீண்டும் சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்கிறார் சோபியா. ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகவுள்ள சூப்பர் மாம் சீசன் 3 நிகழ்ச்சியில் சோபியா தனது மகனுடன் கலந்து கொள்ள இருக்கிறார். இந்த நிகழ்ச்சியை அர்ச்சனாவும் அவரின் மகள் ஜாராவும் தொகுத்து வழங்கவுள்ளனர். மேலும் இந்த ஷோவின் நடுவர்  நடிகை குஷ்பு என்பது கவனிக்க வேண்டியது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Vijay tv, Zee tamil

    அடுத்த செய்தி