ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிக் பாஸில் சண்டை போடும் அண்ணன் பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ் என்ன சொல்றாங்க தெரியுமா?

பிக் பாஸில் சண்டை போடும் அண்ணன் பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ் என்ன சொல்றாங்க தெரியுமா?

ஐஸ்வர்யா ராஜேஷ் - மணிகண்டன்

ஐஸ்வர்யா ராஜேஷ் - மணிகண்டன்

ஐஸ்வர்யா ராஜேஷிடம் பிக் பாஸில் இருக்கும் மணிகண்டன் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று இருக்கும் தனது அண்ணன் மணிகண்டன் குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் மனம் திறந்துள்ளார்.

  பிக் பாஸ்  சீசன் 6 பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் சென்ற மாதம் தொடங்கியது. 21 போட்டியாளர்களுடன் ஆரம்பமான இந்த நிகழ்ச்சியில் இப்போது 17 போட்டியாளர்கள் உள்ளனர். நாளைய எபிசோடில் ஒருவர் வீட்டை விட்டு வெளியேறுவார். ராம் அல்லது மகேஸ்வரி வெளியேற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது விக்ரமனன், அசீம், ஷிவின், ரச்சிதா ஆகியோர் மக்கள் விரும்பும் ஃபேவரெட் போட்டியாளர்கள் லிஸ்டில் உள்ளனர். அதே போல் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமுதவாணன்,  நந்தினி, , ஐஸ்வர்யா ராஜேஷ் அண்ணன் மணிகண்டன் ஆகியோருக்கு நெகட்டிவ் கமெண்டுகள் குவிந்து வருகின்றன.

  அப்பா இருக்காரு.. வசதியான வீட்டு பொண்ணு தான்! அப்ப தனலட்சுமி பிக் பாஸில் சொன்னது எல்லாமே பொய்யா?

  மணிகண்டனை புஜ்ஜி என்று செல்லமாக தான் ஐஸ்வர்யா ராஜேஷ் அழைப்பாராம். அவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பு கூட ஐஸ்வர்யா ராஜேஷ் அண்ணனுக்கு வாழ்த்துக்கள் கூறி இன்ஸ்டாவில் ஸ்டேட்டஸ் போட்டு இருந்தார். ஆரம்பத்தில் எல்லோரிடமும் அன்பாக செம்ம ஜாலியாக இருந்த மணிகண்டன் மைனா நந்தினி வருகைக்கு  பின்னர் நிறையவே மாறி இருப்பதாக ரசிகர்கள் கூறுவதை பார்க்க முடிகிறது.

  விக்ரமனனுடன் சண்டை, தனலட்சுமியுடன் அடிதடி, அமுதவாணனுடன் வாக்குவாதம் என மணிகண்டன் இந்த வாரம் நிறைய சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். இப்படி இருக்கையில் பட புரமோஷனுக்காக பேட்டி கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷிடம் பிக் பாஸில் இருக்கும் மணிகண்டன் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
   
  View this post on Instagram

   

  A post shared by Aishwarya Rajesh (@aishwaryarajessh)  அதற்கு பதில் அளித்த ஐஸ்வர்யா ராஜேஷ் “ நானும் பிக் பாஸ் பார்த்தேன். போன வாரம் புஜ்ஜி சண்டை போட்டு இருந்தான். பிக் பாஸ் வீட்டுக்கு போனதுல இருந்தும் ரொம்ப சீரியஸா இருக்கான், ஆனால் உண்மையில் புஜ்ஜி அப்படியில்லை. பயங்கர ஜாலியான ஆளு. ஆனால் அந்த மாதிரி இன்னும் பிக் பாஸில் மணியை பார்க்கவில்லை. ஒருவேளை அந்த வீட்டுக்கு போனா அப்படி மாறிடுவாங்களோ இல்லை அப்படி காட்டுறாங்களான்னு தெரியல ” என்று கூறியுள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Aiswarya Rajesh, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Vijay tv