முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சுவாரஸ்ய கதைகளத்தில் விஜய் டிவி-யின் ஆஹா கல்யாணம்!

சுவாரஸ்ய கதைகளத்தில் விஜய் டிவி-யின் ஆஹா கல்யாணம்!

ஆஹா கல்யாணம்

ஆஹா கல்யாணம்

தன் மகள்களுக்கு பணக்கார குடும்பத்தில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது கோட்டீஸ்வரியின் கனவு .

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மார்ச் 20-ம் தேதி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகவிருக்கிறது ஆஹா கல்யாணம் தொடர்.

விஜய் டிவியின் வெற்றித்தொடர்களின் வரிசையில் மேலும் ஒரு விறுவிறுப்பான கதையைக்கொண்ட மெகா தொடர் வரும் திங்கள் முதல் ஒளிபரப்பாகிறது. பிரைம்-டைம் என்று சொல்லப்படும் மாலை மற்றும் இரவு நேரங்களில் ஒளிபரப்பப்படும் விஜய் டிவி தொடர்கள் மற்றும் வார இறுதி நாட்களில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் பார்வையாளர்களின் கவனம் பெற்றுள்ளன. சமீபத்தில் ‘சிறகடிக்க ஆசை’, ‘மகாநதி’ ஆகிய சீரியல்களை இச்சேனல் ஒளிபரப்ப தொடங்கியது.

தற்போது ஆஹா கல்யாணம் என்ற பிரமாண்டமான தொடர் ஆரம்பமாகவிருக்கிறது. இது எல்லா வயதினரும் காணும்படி நல்ல கதையம்சத்துடன் பல திருப்பங்களுடன் தனித்துவமாக உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கோடீஸ்வரி மற்றும் அவரது 3 மகள்களான மகாலட்சுமி, ஐஸ்வர்யா, பிரபா ஆகியோர் எளிமையான வாழ்க்கையை வாழ்கிறார்கள். தன் மகள்களுக்கு பணக்கார குடும்பத்தில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது கோடீஸ்வரியின் கனவு.

ஒரு சந்தர்ப்பத்தில் சூர்யா மற்றும் அவனது குடும்பத்தினரை சந்திக்கிறாள். சூர்யாவையும் அவனுடைய இரண்டு சகோதரர்களையும் பார்த்த பிறகு, கோடீஸ்வரி தனது மகள்களை சூர்யாவிற்கும் அவனது சகோதரர்களுக்கும் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்து முயற்சிகளை மேற்கொள்கிறாள். அவளுடைய கனவு நிறைவேறுமா என்பதுதான் கதை.

இதில் சூர்யாவாக விக்ரம், கோடீஸ்வரியாக மௌனிகா, கவுதமாக விபீஷ், விஜய்யாக கணேஷ் ராம், மகாலட்சுமியாக அக்‌ஷயா, ஐஸ்வர்யாவாக காயத்ரி, பிரபாவாக பவ்யஸ்ரீ மற்றும் பலர் நடித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Vijay tv