நிகழ்ச்சிக்காக அல்ல... நிஜத்திலும் நாங்க அப்படித்தான்! வைரலாகும் கவின்-சாண்டி வீடியோ

நிகழ்ச்சிக்காக அல்ல... நிஜத்திலும் நாங்க அப்படித்தான்! வைரலாகும் கவின்-சாண்டி வீடியோ
  • News18
  • Last Updated: October 8, 2019, 12:39 PM IST
  • Share this:
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் சாண்டி வீட்டுக்குச் சென்றுள்ளார் கவின்.

விஜய் டிவியில் இந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் 3-வது சீசனில் நடன இயக்குநர் சாண்டி, நடிகர் கவின் இடையே இருந்த நட்பை பார்வையாளர்களும் பாராட்டினர். ஆரம்பத்தில் கவின் - சாண்டியுடன் சரவணன் சேர மூவர் கூட்டணியாக மாறியது.

கவின் -சாண்டி நட்பைப் பார்த்து பொறாமைப்படுவதாக சகபோட்டியாளரான அபிராமி தெரிவித்தார். பின்னர் சரவணன் வெளியேற கவின், சாண்டி, முகென், தர்ஷன், லாஸ்லியா என்று ஐவர் குழு உதயமானது. அவர்கள் இணைந்து உருவாக்கிய ‘வி ஆர் தி பாய்ஸ்’பாடலும் பிரபலமானது.


டாஸ்க்கின் இடையே இவர்களது நட்பு பல இடங்களில் பிரதிபலித்தது. ஒரு கட்டத்தில் பிக்பாஸ் கொடுத்த ரூ.5 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு கவின் வெளியேறிய போது நண்பர்களாக பழகிவிட்டோம், இனி போட்டியாளர்களாக பார்த்து என்னால் விளையாட முடியாது என்றார். அவர் தனது நண்பர்களுக்காக விட்டுக் கொடுத்ததாகவே அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டனர்.

இறுதி நாள் கொண்டாட்டத்தின் போது கூட டைட்டிலை வென்ற முகின் தர்ஷனை மேடைக்கு அழைத்து சிறப்பித்தார், அதேபோல் சாண்டியும் தனது விருதை கவினுக்கு மாலையாக அணிவித்தார். இதை பார்வையாளர்களும் நெட்டிசன்களும் வியந்து பாராட்டினர்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் தற்போது சாண்டியின் மகள் லாலாவுடன் கவின் சைக்கிள் ஓட்டி விளையாடும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.


வீடியோ பார்க்க: தமிழ் சினிமாவில் சாதி அரசியல்... அசுரன் படம் பற்றி வெற்றிமாறன் பேட்டி

First published: October 8, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading