ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தளபதி 66-ல் விஜய்க்கு வில்லனாகும் அஜித் வில்லன்?

தளபதி 66-ல் விஜய்க்கு வில்லனாகும் அஜித் வில்லன்?

வாரிசு

வாரிசு

'தளபதி 66' படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்றும், கடந்த பத்து வருடங்களில் அவர் நடித்த படங்களை விட இப்படம் வித்தியாசமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

நடிகர் விஜய்யின் தளபதி 66 படத்தில் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் வில்லனாக நடிக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

விஜய்யின் 66-வது படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்காலிகமாக 'தளபதி 66' என்ற தலைப்பு தமிழ் தெலுங்கு இருமொழிகளில் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க திட்டமிடப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தற்போது, 'தளபதி 66' படத்தில் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் வில்லனாக நடிக்கவுள்ளதாக சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது. இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி ஏற்கனவே கூறியது போல், 'தளபதி 66' எமோஷனல் பொழுதுபோக்கு படமாக இருக்கும். ஆகையால் படத்திற்கு ஒரு வலுவான வில்லன் தேவை. எனவே, இப்படத்தில் வில்லனாக நடிக்க விவேக் ஓபராயை தயாரிப்பாளர்கள் பரிசீலித்துள்ளதாக கூறப்படுகிறது.

விஜய் டிவி ‘காற்றுக்கென்ன வேலி’ சீரியலில் நிகழ்ந்த அதிரடி மாற்றம்!

பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், அஜித் நடித்த 'விவேகம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமானார். அவர் 'தளபதி 66' படத்தில் அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்யப்பட்டால், அது அவரது இரண்டாவது தமிழ் படமாக இருக்கும். மேலும் அவர் விஜய் மற்றும் அஜித் இருவருக்கும் வில்லனாக நடித்த அரிதான பிரபலங்களில் ஒருவராக மாறுவார்.

Vivek Oberoi to play against Vijay in Thalapathy 66, Thalapathy Vijay Thalapathy 66 story, thalapathy 66, vijay thalapathy 66 movie, thalapathy 66 story, thalapathy 66 plot, thalapathy 66 story details, தளபதி 66 இயக்குநர் வம்சி, Vijay Thalapathy 66 official announcement, thalapathy 66 director Vamshi Paidipally, thalapathy 66 shoot, thalapathy vijay, thalapathy 66 movie, தளபதி 66, தளபதி விஜய், தளபதி 66 படம், விஜய் படம், thalapathy 66 producer, thalapathy 66 story, thalapathy 66 announcement, thalapathy 66 heroine, thalapathy 66 wikipedia, thalapathy 66 first look, thalapathy 66 poster, thalapathy 66 dil raju, vamshi paidipally, vamshi paidipally thalapathy 66, தளபதி 66 தயாரிப்பாளர், தளபதி 66 கதை, தளபதி 66 அறிவிப்பு, தளபதி 66 கதாநாயகி, தளபதி 66 விக்கிபீடியா, vivek oberoi wife, vivek oberoi net worth, vivek oberoi father, vivek oberoi latest movie, vivek oberoi upcoming movies, vivek oberoi brother, vivek oberoi age, vivek oberoi family

நடிகர் தனுஷின் பிரமாண்ட வீட்டைப் பார்த்திருக்கிறீர்களா? புகைப்படம் இதோ...

'தளபதி 66' படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்றும், கடந்த பத்து வருடங்களில் அவர் நடித்த படங்களை விட இப்படம் வித்தியாசமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதில் ரஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிப்பதாகவும், தமன் இசையமைப்பதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இந்தத் திரைப்படத்தை தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன் தயாரிக்கிறது. இது அவர்களின் முதல் நேரடி தமிழ் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Actor Vijay, Ajith