ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிக் பாஸில் கலக்கும் ADK.. பழைய வீடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

பிக் பாஸில் கலக்கும் ADK.. பழைய வீடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

பிக் பாஸ் ADK

பிக் பாஸ் ADK

3 வருடங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த ஏ.ஆர் ரகுமான் இசை கச்சேரியில் ADK ராப் பாடல், சிவாஜி படத்தில் இடம்பெற்ற ஸ்டைல் பாடல் ஆகியவற்றை பாடி அரங்கத்தை அதிர வைத்து இருக்கிறார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பிக் பாஸ் 6ல் போட்டியாளராக களம் இறங்கி இருக்கும் ராப் பாடகர் ஆர்யன் தினேஷ் கனகரத்தினத்தின் பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

  சண்டைக்கும் சர்ச்சைக்கும் பஞ்சமில்லாமல் டெலிகாஸ்ட் ஆகி வரும் பிக் பாஸ் சீசன் 6ல் தற்போது 18 போட்டியாளர்கள் உள்ளனர். அதில் ADK என அழைக்கப்படும் ஆர்யன் தினேஷ் கனகரத்தினமும் ஒருவர். ராப் பாடகரான இவர் நடிகர், இயக்குனர், எழுத்தாளர் என பன்முகங்களை கொண்டுள்ளார். அவரே பாடல் வரிகளை எழுதி அதை ராப் இசையில் பாடுவார். இலங்கையை சேர்ந்த இவர் பல தமிழ் படங்களில் ராப் பாடலைபாடியுள்ளார். குறும்படங்களையும் இயக்கி நடித்துள்ளார்.  குறிப்பாக ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கும் படங்களில் ஆர்யன் தினேஷ் கனகரத்தினத்துக்கு மறக்காமல் வாய்ப்பு வழங்கப்படும்.

  பிக் பாஸ் வீட்டில் ADK சில நெகட்டிவான கமெண்டுகள் அதே சமயம் பாராட்டுக்களையும் மாறி மாறி பெறுகிறார். அசீமுடன் நெருங்கி பழகும் ADK விக்ரமனன் உடன் அடிக்கடி சண்டை போடுவதை பார்க்க முடிகிறது. நிலையான கருத்தில் இல்லாம அடிக்கடி மாறுவதையும் பார்க்க முடிகிறது. ஆனால் வீட்டில் பலருக்கும், ADKவை பிடித்து இருக்கு. அசல் சென்ற பிறகு அந்த இடத்தை ADK நிரப்பி வருகிறார். போன வாரத்தில் அமுதவாணனை கலாய்த்து ADK பாடியது, வீட்டில் இருக்கும் சக ஹவுஸ்மேட்களை இமிடேட் செய்து இருந்தது அனைவரையும் ரசிக்க வைத்தது.

  ' isDesktop="true" id="829524" youtubeid="3JMll6nYZJo" category="television">

  இந்நிலையில் 3 வருடங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த ஏ.ஆர் ரகுமான் இசை கச்சேரியில் ADK ராப் பாடல், சிவாஜி படத்தில் இடம்பெற்ற ஸ்டைல் பாடல் ஆகியவற்றை பாடி அரங்கத்தை அதிர வைத்து இருக்கிறார். இந்த வீடிபோ தற்போது இணையத்தில் பலரின் கவனத்தையும் பெற்று வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ADK வா இது? என ஷாக்கில் உள்ளன. அதுமட்டுமில்லை ஏ.ஆர் ரகுமான் எனக்கு அண்ணன் மாறி எனவும் ADK பல பேட்டியில் கூறி இருக்கிறார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 5, Vijay tv