Home /News /entertainment /

அப்பவே விஜய் டிவி பிரபலத்தின் திருமணத்தில் கலந்து கொண்ட அதிதி.. ஃபோட்டோ உள்ளே!

அப்பவே விஜய் டிவி பிரபலத்தின் திருமணத்தில் கலந்து கொண்ட அதிதி.. ஃபோட்டோ உள்ளே!

அதிதி ஷங்கர்

அதிதி ஷங்கர்

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிதியா இது? என ஆச்சரியப்படுகின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    விஜய் டிவி பிரபலத்தின் திருமணத்தில் நடிகை அதிதி ஷங்கர் அப்பா மற்றும் அம்மாவுடன் கலந்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    தமிழ் சினிமாவுக்கு கிடைத்த சமீபத்திய புது வரவு அதிதி. பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகளான இவர் விருமன் படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக காலடி எடுத்து வைத்து இருக்கிறார். மருத்துவம் படித்தவர், படித்து முடித்த உடனே சினிமாவுக்கு வந்து விட்டார். சிறு வயதில் இருந்தே சினிமா, டான்ஸ், பாட்டு என எல்லாவற்றிலும் ஆர்வம் காட்டியவர் இன்று அக்மார்க் நடிகையாக களம் இறங்கியுள்ளார். வெறும் நடிகை மட்டுமில்லை விருமன் படத்தில் ஒரு பாடலை பாடி பாடகியாகவும் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளார். முதல் படம் வெளிவருவதற்கு முன்பே அதிதி இளைஞர்களின் லேட்டஸ்ட் க்ரஷ்னார்.

    என்ன ஷபானா இதெல்லாம்? சீரியல் முடிந்த கையோடு ஆளே மாறிப்போன நடிகை!

    படம் வெளியாகி இவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்ட பின்பு எந்த பக்கம் திரும்பினாலும் அதிதி குறித்த பேச்சு தான். மிகவும் இயல்பாக பழக கூடியவர், ஷங்கர் மகள் என்று சொன்னால் யாராலும் நம்ப முடியாது என கார்த்தி, சூரி அனைவரும் புகழ்ந்து தள்ளியுள்ளனர். அதுமட்டுமில்லை அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திலும் அதிதி தான் ஹீரோயின். சோஷியல் மீடியாவில் அதிதி குறித்த அனைத்து தகவல்களும் வெளியாகி பலரின் கவனத்தையும்  பெற்றுள்ளது.

    aditi shankar old photos director shankar daughter viruman movie heroine aditi childwood photo in dd marriage viral
    அதிதி ஷங்கர்


     

     

    aditi shankar old photos director shankar daughter viruman movie heroine aditi childwood photo in dd marriage viral
    அதிதி


    குறிப்பாக அவரின் 10ம் வகுப்பு மார்க், ஸ்கூலில் அதிதி போட்ட சண்டை, அவருக்கு பிடித்த சாப்பாடு, அவரின் குழந்தை பருவ புகைப்படங்கள் என சோஷியல் மீடியா முழுவதும் அதிதி ராஜ்ஜியம் தான். அந்த வகையில் அதிதி தனது அப்பா மற்றும் அம்மாவுடன் விஜய் டிவி ஆங்கர் டிடி திருமணத்தில் கலந்து கொண்ட புகைப்படம் இப்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

    aditi shankar old photos director shankar daughter viruman movie heroine aditi childwood photo in dd marriage viral
    அதிதி


    அந்த புகைப்படத்தில் பிளாக் கலர் ட்ரெஸ்ஸில் அதிதி செம்ம க்யூட்டாக இருக்கிறார். டிடிக்கு கைக்கொடுத்து வாழ்த்துக்களையும் கூறுகிறார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிதியா இது? என ஆச்சரியத்தில் அந்த புகைப்படத்தை பார்த்து வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Director Shankar, Vijay tv

    அடுத்த செய்தி