VJ Lokesh: உயிரை மீட்ட விஜய் சேதுபதிக்கு நன்றி - வி.ஜே.லோகேஷ் நெகிழ்ச்சி வீடியோ!

VJ Lokesh: உயிரை மீட்ட விஜய் சேதுபதிக்கு நன்றி - வி.ஜே.லோகேஷ் நெகிழ்ச்சி வீடியோ!

வி.ஜே.லோகேஷ்

"என்னை மீண்டு வரவழைத்த உங்களுக்கு நன்றி விஜய் சேதுபதி அண்ணா" என்று குறிப்பிட்டுள்ளார் லோகேஷ்.

  • Share this:
தனது சிகிச்சைக்கு உதவிய நடிகர் விஜய் சேதுபதிக்கு நெகிழ்ச்சியான முறையில் தனது நன்றியை தெரிவித்திருக்கிறார் ஆதித்யா டிவி தொகுப்பாளர் லோகேஷ்.

ஆதித்யா தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தவர் லோகேஷ். இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி - நயன்தாரா நடிப்பில் வெளியான ’நானும் ரௌடி தான்’ உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். இவர் கடந்த மார்ச் மாதம் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். அப்போது நடிகர் விஜய் சேதுபதி லோகேஷை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அவரது சிகிச்சைக்கும் உதவினார்.

Bigg Boss: தனுஷுடன் பிக் பாஸ் பிரபலம் – வைரலாகும் குழந்தைப் பருவ படம்!



 




View this post on Instagram





 

A post shared by Lokesh Pop Addy (@popaddy)






இதைத் தொடர்ந்து முதற்கட்ட அறுவை சிகிச்சையை முடித்த லோகேஷ், விரைவில் அடுத்த கட்ட சிகிச்சைக்கு செல்வதாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். தற்போது அவருக்கு ஸ்கல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. பூரண நலம் பெற்றிருக்கும் லோகேஷ், தனக்கு உதவிய விஜய் சேதுபதிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவரை அழைத்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இது குறித்த பதிவில் "என்னை மீண்டு வரவழைத்த உங்களுக்கு நன்றி விஜய் சேதுபதி அண்ணா" என்று குறிப்பிட்டுள்ளார் லோகேஷ்.

இந்த வீடியோ தற்போது இன்ஸ்டாகிராமில் கவனம் ஈர்த்துள்ளது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published: