Home /News /entertainment /

கலர்ஸ் தமிழ் காமெடி நிகழ்ச்சியில் வனிதா விஜயகுமார்!

கலர்ஸ் தமிழ் காமெடி நிகழ்ச்சியில் வனிதா விஜயகுமார்!

வனிதா விஜயகுமார்

வனிதா விஜயகுமார்

இந்நிகழ்ச்சி நடிகை வனிதாவிற்கும், ராஜா ஜல்சாவிற்கும் இடையில் நிகழும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் உரையாடல் குறித்தது

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
  கலர்ஸ் தமிழ் கன்னித் தீவு உல்லாச உலகம் 2.0 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வனிதா விஜயகுமார் பங்கேற்றிருக்கிறார்.

  பொழுதுபோக்கு தொலைக்காட்சியான கலர்ஸ் தமிழின், குதூகலம் நிறைந்த வார இறுதி நாட்களின் மகிழ்ச்சி மழையில் நனையத் தயாராகுங்கள். பிரபல ஸ்பூஃப் காமெடி நிகழ்ச்சியான கன்னித் தீவு உல்லாச உலகம் 2.0- வில் பிரபல நடிகை வனிதா விஜயகுமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். வனிதா விஜயகுமாருடன் இணைந்து ராஜா ஜல்சா (ரோபோ சங்கரின் நடிப்பில்), ராஜமாதா ஷகீலா, பேபி மாதா ஜாங்கிரி மதுமிதா ஆகியோர் கலக்கும் நகைச்சுவையை கண்டு மகிழ இந்த ஞாயிறு இரவு 7.00 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்யுங்கள்.

  சிறப்பு பார்ட்னராக கேட்பரி 5 ஸ்டார் இணைந்திருக்கின்ற கன்னித்தீவு உல்லாச உலகம் 2.0 நான்கு பிரிவுகளை உள்ளடக்கியது. கன்னித்தீவு நிகழ்ச்சியின் இந்தவார எபிசோடு, சிறப்பு விருந்தினர் நடிகை வனிதாவிற்கும், ராஜா ஜல்சாவிற்கும் இடையில் நிகழும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் உரையாடல் குறித்தது. கட்டப்பா என்ற கதாபாத்திரத்தில் அசத்தலான நடிப்பின் வழியாக கன்னித்தீவின் இந்த வார நிகழ்ச்சி உங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துவது நிச்சயம். நகைச்சுவை நடிகர் அமுதவாணன் பவர் ஸ்டாராக வலம் வருவது இந்நிகழ்ச்சியின் சுவையை இன்னும் தாறுமாறாகக் கூட்டுகிறது.

  இந்நிகழ்ச்சி பற்றி பேசிய நடிகை வனிதா விஜயகுமார், “கன்னித் தீவு உல்லாச உலகம் 2.0–ன் ஒரு அங்கமாக பங்கேற்றது, ஒரு வியக்க வைக்கும் அனுபவமாகும். திரைப்பட உலகைச் சேர்ந்த பல நகைச்சுவை நடிகர்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களின் அற்புதமான கலவையாக இந்த ஒட்டுமொத்த நிகழ்ச்சியும் இருக்கிறது. கலர்ஸ் தமிழ் போன்ற சிறப்பான சேனலுடனும், நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கருடனும் சேர்ந்து பணியாற்றியது பெரும் மகிழ்ச்சியளிப்பதாக இருந்தது. இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றது மிகவும் ஆனந்தமாக ரசிக்க வைத்தது என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. என்னைப்போலவே இந்நிகழ்ச்சியை பார்ப்பவர்களும் அதே அளவிற்கு மகிழ்ச்சியோடு ரசிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்” என்றார்.

  கன்னித்தீவு உல்லாச உலகம் 2.0 என்பது, கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிற மிக சமீபத்திய காமெடி நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி ராஜா ஜல்சானந்தா மற்றும் அவர் வசிப்பிடமான கன்னித்தீவில் நிகழும் சம்பவங்களை நகைச்சுவை பொங்க சித்தரிக்கிறது. ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகிற இந்நிகழ்ச்சியானது, நான்கு பிரிவுகளாக இடம்பெறுகின்றன.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  ஒவ்வொன்றும் மற்றதைவிட அதிக கேளிக்கை நிறைந்ததாக இருப்பது இதன் சிறப்பம்சமாகும். பிரபல காமெடியனும், நடிகருமான ரோபோ சங்கருடன் பிரபல சின்னத்திரை கலைஞரும், நடிகையுமான மதுமிதா, பேபி மாத என்ற கதாபாத்திரத்தில் புதிய அவதாரம் எடுத்திருக்கிறார். புகழ்பெற்ற நடிகை ஷகிலா ராஜமாதாவாக இதில் இணைந்திருப்பது இந்நிகழ்ச்சியின் கிளுகிளுப்பை இன்னும் உயர்த்துகிறது.
  ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையன்றும் இந்த காமெடி கிளப்பில் ஆல் ஆக்சஸ் ராஜகுரு என்ற கதாபாத்திரத்தில் திண்டுக்கல் சரவணன், மாதா ஜிங்காராவாக நடிகை அன்ன பாரதியும், மாதா ஜால்ராவாக நர்மதாவும், தீவின் பிஆர்ஓ பிச்சுமணியாக அடாவடி அன்சரும் மற்றும் கலையரசனாக நடிகர் அமுதவாணனும் இணைந்திருக்கின்றனர். பார்வையாளர்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்துவதற்கு கலையரசனின் குழுவினராக பிரகாஷ், விக்னேஷ் சிவா, ரஜினி வேலு ஆகியோர் செய்யும் சேட்டைகளும், நடிப்பும் சிறப்பான பங்களிப்பை செய்கின்றன.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published:

  Tags: Vanitha Vijayakumar

  அடுத்த செய்தி