ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சீரியல் நடிகை தற்கொலையில் திருப்பம்.. கடிதத்தால் சிக்கும் காதலன்! நடந்தது என்ன?

சீரியல் நடிகை தற்கொலையில் திருப்பம்.. கடிதத்தால் சிக்கும் காதலன்! நடந்தது என்ன?

வைஷாலி தக்கர்

வைஷாலி தக்கர்

கடந்த 2011-ம் ஆண்டு இந்தியில் வைஷாலி நடித்த தொடர், தமிழில் 'மூன்று முடிச்சு' என்ற பெயரில் வெளியானது. இந்தி மற்றும் தமிழில் இந்த தொடர் சின்னத்திரை ரசிகர்களுக்கிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

 • News18
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  இந்தியில் பிரபலமான சீரியல் நடிகை, முன்னால் காதலனின் டார்ச்சரால் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  சூப்பர் சிஸ்டர்ஸ், மன்மோகினி போன்ற இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமடைந்தவர் வைஷாலி தக்கர். மத்திய பிரதேசத்தின் இந்தூரில் வசித்து வந்த இவர், ஞாயிற்று கிழமை தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

  போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விட்டு, நடிகை வைஷாலியின் அறையில் சோதனை செய்தனர்.

  அப்போது வைஷாலி எழுதிய ஒரு உருக்கமான கடிதத்தை கைப்பற்றினர். அதில், தான் நீண்ட நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து வருவதாகவும், தனது முன்னாள் காதலரால் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

  முன்னால் காதலரின் டார்ச்சரால்தான் நடிகை வைஷாலி தற்கொலை செய்திருப்பதாக அவரது குடும்பத்தினரும் தெரிவித்துள்ளனர்.

  வைஷாலிக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அபிநந்தன் என்பவருடன் திருமணம் நிச்சயம் நடைபெற்றுள்ளது. இதனை தனது சமூக வலைதள ரசிகர்களுடன் பகிர்ந்துள்ள வைஷாலி, தனது வருங்கால கணவர் கென்யா நாட்டை சேர்ந்த பல் மருத்துவர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

  அதன்பின், ஒரு மாதத்திற்கு பிறகு அபிநந்தனை திருமணம் செய்யபோவதில்லை என்றும், ஜூனில் நடக்க இருந்த திருமணமும் ரத்து செய்யப்பட்டதாகவும் வைஷாலி தெரிவித்தார்.

  இந்த நிலையில்தான் வைஷாலி தற்கொலை செய்துள்ளார். கடந்த 2011-ம் ஆண்டு இந்தியில் வைஷாலி நடித்த தொடர், தமிழில் 'மூன்று முடிச்சு' என்ற பெயரில் வெளியானது. இந்தி மற்றும் தமிழில் இந்த தொடர் சின்னத்திரை ரசிகர்களுக்கிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

  அந்த சீரியலில் அஞ்சலி என்ற கதாபத்திரத்தில் நடித்து பெண் ரசிகைகளிடம் புகழ்பெற்றார் வைஷாலி. வைஷாலி நெகட்டிவ் கதாப்பாத்திரங்களில் சிறப்பாக நடித்ததற்காக பல விருதுகளையும் வாங்கியுள்ளார்.

  Also read... சோவியத் யூனியனில் 3.48 கோடி பேர் பார்த்த தேவரின் யானை படம்

  வைஷாலி தற்கொலை செய்து கொண்ட செய்தி அறிந்த இந்தி சின்னத் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

  நடிகைகள் சித்ரா, திவ்யா, வைஷாலி என தொடர்ச்சியாக நடிகைகள் தற்கொலை செய்து கொள்வது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Vinothini Aandisamy
  First published: