Home /News /entertainment /

சன் டிவி சீரியலில் இருந்து பிரபல வில்லி விலகல்... அதிர்ச்சியில் ரசிகர்கள்

சன் டிவி சீரியலில் இருந்து பிரபல வில்லி விலகல்... அதிர்ச்சியில் ரசிகர்கள்

சுபலட்சுமி ரங்கன்

சுபலட்சுமி ரங்கன்

ஷில்பாவாக நடித்து வந்த சுப்புலட்சுமியின் விலகல் ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதையடுத்து அந்த கேரக்டரில், நடிக்க நடிகை நித்யா ராஜ் கமிட் ஆகியுள்ளார்.

    சன் டிவி-யின் அன்பே வா சீரியலில் இருந்து நடிகை சுபலட்சுமி ரங்கன் விலகியுள்ளார்.

    சின்னத்திரையில் நிறைய காமெடி நிகழ்ச்சிகள், விதவிதமான ரியாலிட்டி ஷோக்கள், பட்டிமன்றங்கள் உட்பட பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வந்தாலும் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக மக்களை ஆக்கிரமித்துள்ளது சீரியல்கள் தான். வாரத்தின் முதல் நாளான திங்கள் முதல் சனி வரை தினமும் சீரியல்கள் ஒளிபரப்படுவதிலேயே, மக்கள் மத்தியில் சீரியல்களுக்கு உள்ள மவுசு பற்றி நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

    அந்த வகையில் சன் டிவி மற்றும் விஜய் டிவி-யில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. சன் டிவி-யில் காலை 9.30 மணி முதல் இரவு 11 மணி வரை கிட்டத்தட்ட 15-க்கும் மேற்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அதில் அன்பே வா சீரியலும் ஒன்று.

    காதல் மற்றும் த்ரில்லர் கதையமைசத்தில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் டெல்னா டேவிஸ், விராட், கன்யா பாரதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். தொடர் கொலை, போலீஸ் விசாரணை என்று பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் இந்த சீரியலில் வில்லி ஷில்பா வேடத்தில் சுபலட்சுமி ரங்கன் நடித்து ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்றார்.

    எப்போதும் விஜய் சாரின் தீவிர ரசிகன் நான் - பாலிவுட் நடிகர் வருண் தவான்!

    தற்போது அவர் அன்பே வா சீரியலில் இருந்து விலகியுள்ளார். திடீரென இவர் ஏன் விலகினார் என்பதற்கான காரணம் இன்னும் அதிகராப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஷில்பாவாக நடித்து வந்த சுப்புலட்சுமியின் விலகல் ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதையடுத்து அந்த கேரக்டரில், நடிக்க நடிகை நித்யா ராஜ் கமிட் ஆகியுள்ளார்.

    கிருத்திகா உதயநிதி படத்தின் டைட்டில் மற்றும் முதல் சிங்கிள் வெளியீடு

    ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் என்றென்றும் புன்னகை என்ற தொடரில் நடித்து வரும் நித்யா ராஜ், ஜீதமிழின் சூர்யவம்சம், மற்றும் கலர்ஸ் தமிழின் எங்கவீட்டு மீனாட்சி உள்ளிட்ட தொடர்களில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    குவைத்தை தொடர்ந்து இன்னொரு நாட்டிலும் பீஸ்ட் படத்துக்கு தடை?

    பாரதி கண்ணம்மா தொடரில் ரோஷினி ஹரிப்ரியன், அகில், ஸ்வீட்டி, ராஜா ராணி 2 சீரியலில் ஆல்யா மானசா என பிரபலமான சீரியல்களில் இருந்து முக்கிய நட்சத்திரங்கள் விலகிய பட்டியலில் தற்போது சுப்புலட்சுமியும் இணைந்துள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Sun TV, TV Serial

    அடுத்த செய்தி