முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / "நீங்கள் பார்ப்பது கொஞ்சம் தான்"... சர்வைவர் ஷோவில் இருந்து வெளியேறிய நடிகை ஸ்ருஷ்டியின் இன்ஸ்டா பதிவு!

"நீங்கள் பார்ப்பது கொஞ்சம் தான்"... சர்வைவர் ஷோவில் இருந்து வெளியேறிய நடிகை ஸ்ருஷ்டியின் இன்ஸ்டா பதிவு!

ஸ்ருஷ்டி

ஸ்ருஷ்டி

ஒரு பழமையான வாழ்க்கை முறையை வாழ்வது என்பது எளிதான காரியமல்ல. தற்போது விளையாட்டில் இருக்கும் ஒவ்வொரு சக போட்டியாளர்களுக்கும் நான் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறேன்.

  • Last Updated :

அர்ஜுன் தொகுத்து வழங்கும் சாகச ரியாலிட்டி ஷோவான சர்வைவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. போட்டிகளுக்கு பஞ்சமில்லாமல் விறுவிறுப்பாக செல்லும் இந்த நிகழ்ச்சி ரசிகர்களின் எகோபத்திய வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் திரைத் துறையின் முன்னணி பிரபலங்கள் பங்கேற்கும் இந்த ஷோவில் மொத்தம் 16 போட்டியாளர்கள் உள்ளனர். அதில் நடிகை ஸ்ருஷ்டி டாங்கேவும் ஒருவர். இவர் கடந்த வார எபிசோடில் (செப்டம்பர் 20) நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்படும் போது மிகவும் உணர்ச்சிவசப்பட்ட அவர், தற்போது தனது சமூக ஊடக பக்கத்தில் நிகழ்ச்சி குறித்து ஒரு பெரிய பதிவையே நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார். சாகச அடிப்படையிலான நிகழ்ச்சியின் சவாலான அம்சங்களைப் பற்றி ஸ்ருஷ்டி அதில் பேசியுள்ளார். மேலும் ஆதரவளித்த தமிழ் மக்களுக்கு அவர் தனது நன்றிகளையும் தெரிவித்துள்ளார். அவர் அதில் பதிவிட்டுள்ளதாவது, “டார்லிங்ஸ் நான் குட்பை சொல்வதை வெறுக்கிறேன். #சர்வைவர் நிகழ்ச்சி ஒரு சாதாரண ரியாலிட்டி ஷோவாக இருக்கலாம். ஆனால் உண்மையை சொல்ல வேண்டுமானால் நீங்கள் டிவி-யில் பார்ப்பது ஒரு சிறிய பிட் கூட இல்லை. அங்கு நிறைய நடக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒரு பழமையான வாழ்க்கை முறையை வாழ்வது என்பது எளிதான காரியமல்ல. தற்போது விளையாட்டில் இருக்கும் ஒவ்வொரு சக போட்டியாளர்களுக்கும் நான் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறேன். ஏனெனில் இந்த நிகழ்ச்சி இரக்கமற்ற மற்றும் கடினமான நிகழ்ச்சி. மிகவும் வசதியான மற்றும் சவுகரியமான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு திடீரென பழமையான வாழ்க்கைக்கு மாறும் பொழுது அது உங்கள் உடலையும் மனதையும் கடுமையாக பாதிக்கும். கூடுதலாக குடும்பத்தை விட்டு விட்டு, தனிமைப்படுத்தப்பட்டு, உங்களுக்குத் தெரியாத நபர்களுடன் பணிபுரிவது என்பது மிகவும் கடினமாக இருக்கும்.

பழங்குடியின கூட்டணியை நம்பி நீங்கள் ஒவ்வொரு நாளும் சிறந்து விளங்க உங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் நான் நினைத்த இடத்தை என்னால் அடைய முடியாமல் இருக்கலாம். ஆனால் நான் நினைத்த இடத்திற்கு வந்துவிட்டேன் என்று நினைக்கிறேன். சர்வைவர் நிகழ்ச்சியில், நான் கற்றுக்கொண்ட ஒரு அற்புதமான விஷயம் என்னவென்றால், சின்ன சின்ன விஷயங்களையும் நாம் பாராட்ட வேண்டும். நமக்கு ஒரு கருத்து இருக்கும். பார்வை இருக்கும். அதை வைத்து மட்டுமே நாம் யோசிப்போம். மற்றவருடைய பார்வையில் அதை நாம் யோசிக்க மாட்டோம்.

தோல்வி என்பது உண்மையில் தோல்வி கிடையாது. அது நமக்கு அனுபவம் என்று சின்ன வயதில் படித்திருப்போம். அப்படித்தான் நான் இப்போது உணர்கிறேன். நான் சர்வைவரில் இருந்து வெளியே வந்ததை ஒரு தோல்வியாகக் உணரவில்லை. உங்கள் அனைவருடனும் இணைவதற்கான ஒரு பலமாக இதை நான் பார்க்கிறேன். ஆமாம் தற்போது நான் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இருக்க முடியாததால் மற்றும் தினசரி அடிப்படையில் பார்வையாளர்களுடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பை இழந்ததால் நான் மோசமாக உணர்கிறேன். மேலும் இந்த நிகழ்ச்சி மூலம் கிடைத்த அனுபவத்தை என்னால் உண்மையில் மறக்க முடியாது.

Also read... வலிமை vs பீஸ்ட்: பொங்கலுக்கு மோத தயாராகும் அஜித், விஜய்!

நிறைய வலி, கண்ணீர், மகிழ்ச்சி, சந்தோஷம் மற்றும் போராட்டம் என நிறைய உணர்வுகளைக் கொண்ட ஒரு ரியாலிட்டி ஷோ தான் இது. "ஒரு பயணத்தின் முடிவு என்பது மற்றொரு பயணத்திற்கான தொடக்கம்". எனவே எனது வரவிருக்கும் ப்ராஜெக்ட்டுகள் மூலம் எதிர்காலத்தில் உங்களை மேலும் மகிழ்விக்க விரும்புகிறேன். உங்கள் அன்பு, பிரார்த்தனை, ஆதரவு மற்றும் இனிய மீம்ஸ்கள் அனைத்திற்கும் நன்றி என்ற ஒரு சொல் போதாது .. உங்கள் அனைவருக்கும் லாட்ஸ் ஆப் லவ். இந்த வாய்ப்பு தந்ததற்கு அர்ஜுன் சார்க்கு நன்றி. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் அர்ஜுன் சார் ஒன்று கூறியிருந்தார். அது "வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு" அது உண்மைதான்! சர்வைவர் தமிழில் இருந்து இறுதியாக விலகுகிறேன்.

அன்புடன்,

ஸ்ருஷ்டி டாங்கே"

top videos

    என்று மிக நீண்ட பதிவினை வெளியிட்டுள்ளார். தற்போது, 15 போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி இன்னும் விறுவிறுப்பை பெற்றுள்ளது.

    First published:

    Tags: Survivor Tamil