Sona: கலர்ஸ் தமிழ் ‘அபி டெய்லர்’ சீரியலில் நடிகை சோனா!

சோனா

ஆரம்பகாலத்தில் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்ததால் தமிழில் தொடர்ந்து கவர்ச்சியான கதாபாத்திரங்களே தேடி வருகிறது.

  • Share this:
    நடிகை சோனா தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள அபி டெய்லர் சீரியலில் நடிக்கவுள்ளார்.

    தற்போது வெள்ளித்திரையை விட சின்னத்திரை தான் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்று வருகிறது. வெள்ளித்திரை நடிகைகளை விட சின்னத்திரை நடிகைகள் மக்களிடம் எளிதில் நெருக்கமாகி விடுகிறார்கள். அந்த வகையில் சினிமா நட்சத்திரங்களின் பார்வையும் சின்னத்திரை மீது விழுந்திருக்கிறது.

    இந்நிலையில் வெள்ளித்திரையில் இருந்து மேலும் ஒரு நடிகை சின்னத்திரையில் கால் பதிக்கிறார். தமிழ் சினிமாவில் துணை நடிகையாக நடித்த நடிகை சோனா, சில திரைப்படங்களில் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானார். பின்னர் சில நகைச்சுவை குணச்சித்திர கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்துவந்த சோனா தற்போது சீரியலில் கால் பதிக்கிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கும் அபி டெய்லர் சீரியலில் நடிக்கவிருக்கும் சோனா, இது பற்றி, “ஆரம்பகாலத்தில் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்ததால் தமிழில் தொடர்ந்து கவர்ச்சியான கதாபாத்திரங்களே தேடி வருகிறது. ஆனால் மலையாளத்தில் அப்படி அல்ல அங்கு வில்லி, குணச்சித்திரம் என பலவிதமான வேடங்களில் நடித்துவிட்டேன். தற்போது அபி டெய்லர்ஸ் டிவி சீரியலில் நடிப்பதால் சினிமாவை விடும் எண்ணம் இல்லை. தமிழில் மூன்று திரைப்படங்களிலும் மலையாளத்தில் மூன்று திரைப்படங்களிலும் நடித்து வருகிறேன்.

    டிவி சீரியலில் நடித்தாலும் திரைப்படங்களிலும் தொடர்ந்து நடிப்பேன். தமிழில் நான் நடித்த வாலிப ராஜா திரைப்படத்தின் இயக்குனர் சாய் கோகுல் ராம்நாத் தான், அபி டெய்லர்ஸ் டிவி சீரியலையும் இயக்குகிறார். திரைப்படத்தில் பணியாற்றிய அதே படக்குழுவே சீரியலிலும் பணியாற்ற உள்ளதால் எனக்கு இதுவும் திரைப்படம் போலவே தான் தோன்றுகிறது. அபி டெய்லர்ஸ் டிவி சீரியலில் கதாநாயகன், கதாநாயகி மற்றும் என்னுடைய கதாபாத்திரம் என இந்த மூன்று கதாபாத்திரங்களை மையமாக கொண்டே கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: