ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஜீ தமிழின் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் சிட்டுக்குருவி பாட்டி - வைரலாகும் போட்டோ.!

ஜீ தமிழின் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் சிட்டுக்குருவி பாட்டி - வைரலாகும் போட்டோ.!

sittukuruvi patti

sittukuruvi patti

Zee Tamil Serial | ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக நிறைவடைந்த யாரடி நீ மோகினி சீரியலுக்கு பிறகு, மீண்டும் ரசிகர்களை கவரும் வகையில் பல சீரியல்களை களமிறக்கி உள்ளது. புதுப்புது அர்த்தங்கள், செம்பருத்தி, வித்யா நம்பர் 1, கோகுலத்தில் சீதை, இரட்டை ரோஜா, பேரன்பு, தெய்வம் தந்த பூவே, அன்பே சிவம், சித்திரம் பேசுதடி உள்ளிட்ட பல சீரியல்கள் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்றன.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

தமிழ் சேனல்களில் மக்களால் விரும்பி பார்க்கப்படும் பல நிகழ்ச்சிகள் இருந்தாலும் அவற்றில் மிக முக்கியமானவையாக இருப்பவை 2 மட்டும் தான். அவை சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள். பிரபல சேனல்களில் ஒன்றாக இருந்து வரும் ஜீ தமிழ், பல சீரியல்களை ஒளிபரப்பினாலும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த "யாரடி நீ மோகினி" சீரியல் மூலம் நீண்ட காலமாக சீரியல்களை ஒளிபரப்பி வரும் முன்னணி சேனல்களுக்கு டஃப் கொடுத்தது.

ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக நிறைவடைந்த யாரடி நீ மோகினி சீரியலுக்கு பிறகு, மீண்டும் ரசிகர்களை கவரும் வகையில் பல சீரியல்களை களமிறக்கி உள்ளது. புதுப்புது அர்த்தங்கள், செம்பருத்தி, வித்யா நம்பர் 1, கோகுலத்தில் சீதை, இரட்டை ரோஜா, பேரன்பு, தெய்வம் தந்த பூவே, அன்பே சிவம், சித்திரம் பேசுதடி உள்ளிட்ட பல சீரியல்கள் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்றன.

இதனிடையே ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 2021ஆகஸ்ட் 23 முதல் ‘நினைத்தாலே இனிக்கும்’ சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் நடிகர் ஆனந்த் செல்வன், பணக்கார குடும்பத்தில் பிறந்தவராக சித்தார்த் என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக நடிகை ஸ்வாதி ஷர்மா, பொம்மி என்ற கேரக்டரில் நடித்து வருகிறார்.

ஜீ தமிழின் பல சீரியல்கள் TRP ரேட்டிங்கில் பட்டையை கிளப்பி வருகின்றன. மக்களின் மனதில் தனி இடம் பிடித்த அப்படிப்பட்ட சீரியல்களில் ஒன்றாக இருந்து வருகிறது நினைத்தாலே இனிக்கும். குறுகிய காலகட்டத்தில் மக்களின் மனதை கவர்ந்த நினைத்தாலே இனிக்கும் சீரியலில் புதிதாக ஒரு பிரபலம் இணைய உள்ளார். அது தொடர்பான போட்டோவை தனது இன்ஸ்டாவில் ஸ்டோரியாக வைத்துள்ளார் சீரியல் நாயகன் நடிகர் ஆனந்த் செல்வன்.
 
View this post on Instagram

 

A post shared by Tamil Serials (@tamilserialexpress)மெர்சல், விஸ்வாசம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நிற்கும் சிட்டுக்குருவி பாட்டி தான் தற்போது நினைத்தாலே இனிக்கும் சீரியலில் புதிதாக இணைந்து உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் பாட்டியாக நடித்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் தான் இந்த சிட்டுக்குருவி பாட்டி. இவரது இயற்பெயர் சீனியம்மா. மெர்சல் படத்தில் சிட்டுக்குருவி என்ற கேரக்டரில் நடித்ததால் அதன் பிறகு இவரை எல்லோரும் சிட்டுக்குருவி பாட்டி என்றே குறிப்பிட்டு வருகிறார்கள்.

Also Read : சன்டிவியின் சூப்பர் ஹிட் சீரியல் கலர்ஸ் தமிழில் மறுஒளிபரப்பு!

காதில் பெரிய தொங்கட்டான், 2 மூக்கிலுமே மூக்குத்தி, கண்டாங்கி புடவையுடன் என தோற்றமளிக்கும் சிட்டு குருவி பாட்டி ஏற்கனவே நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்து உள்ளார். முன்பு விழா ஒன்றில் பேசிய இவர், தள்ளாத வயதானாலும் யார் உதவியையும் எதிர்பார்க்காமல் உழைத்து சாப்பிட வேண்டும் என்று நினைப்பதால் சினிமாவில் நடித்து வருவதாக கூறி அனைவரையும் கண்கலங்க வைத்தவர்.

Also Read : அஜித்தின் வான்மதி உருவாக காரணமாக இருந்த மதுமதி!

இதனிடையே நடிகர் ஆனந்த் செல்வன் "நினைத்தாலே இனிக்கும் சீரியலில் சிட்டுக்குருவி பாட்டி" என்று டைட்டில் கொடுத்து அவருடன் தான் எடுத்து கொண்டுள்ள போட்டோவை இன்ஸ்டா ஸ்டோரியாக வைத்து உள்ளார். இதனை அடுத்து சிட்டுக்குருவி பாட்டியின் இயல்பான நடிப்பை பார்க்க சீரியல் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

Published by:Selvi M
First published:

Tags: Entertainment, TV Serial, Zee tamil