Simran: எனெர்ஜி குறையாத சிம்ரன்... ’ஆல்தோட்ட பூபதி’ பாடலுக்கு இன்றைய யூத்களுடன் டான்ஸ்!

ஆல்தோட்ட பூபதி

விஜய்யும் சிம்ரனும் இணைந்து நடனமாடினால் அது ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையும்.

  • Share this:
    இன்றைய இளம் தலைமுறையுடன் ’ஆல்தோட்ட பூபதி’ பாடலுக்கு நடனமாடி, இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்துள்ளார் நடிகை சிம்ரன்.

    1990 மற்றும் 2000-ன் முதல் பாதிவரை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை சிம்ரன். நடிப்பு, டான்ஸ் என ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என ஒரு ரவுண்டு வந்தாலும் தமிழ் சினிமாவில் தான் அதிகப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார். இன்றளவும் இளம் நடிகைகளுக்கு ரோல் மாடலாக விளங்கும் சிம்ரன், இன்றும் பலரது ஃபேவரிட் நடிகையாக இருக்கிறார். இன்னும் தமிழ் சினிமாவில் சிம்ரனின் இடத்தை வேறு யாரும் பிடிக்கவில்லை.




    ரசிகர்களை திரையில் கவர்ந்த ரீல் ஜோடி என்றால் விஜய்-சிம்ரன் பேர் முதன்மையானது. ஒன்ஸ் மோர், துள்ளாத மனமும் துள்ளும், பிரியமானவளே என இவர்கள் இணைந்து நடித்த படங்கள் அனைத்தும் ரசிகர்களிடம் தெறி ஹிட். அதோடு விஜய்யும் சிம்ரனும் இணைந்து நடனமாடினால் அது ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அந்த வகையில் விஜய் நடித்த யூத் படத்தில், ’ஆல்தோட்ட பூபதி’ பாடலுக்கு அவருடன் இணைந்து நடனமாடியிருப்பார் சிம்ரன். அந்தப் பாடலும், அதில் அவர்களின் நடனமும் இன்றும் ரசிகர்களை மகிழ்விக்கும் வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் தற்போது சிம்ரன் இளம் தலைமுறையுடன் இணைந்து ஆல்தோட்ட பூபதி பாடலுக்கு நடனமாடியுள்ளார். அந்த ரீல்ஸ் வீடியோ இன்ஸ்டாகிராமில் லைக்குகளை குவித்து வருகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: