பிக்பாஸ் 5-ல் போட்டியாளராக களமிறங்கும் நடிகை ஷகிலா மகள்?

பிக்பாஸ் 5-ல் போட்டியாளராக களமிறங்கும் நடிகை ஷகிலா மகள்?

ஷகிலா மகள் மிலா

தமிழ் பிக்பாஸ் 5-ல் நடிகை ஷகிலாவின் வளர்ப்பு மகள் மிலா போட்டியாளராக கலந்து கொள்ள வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

  • Share this:
தமிழில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனில் நடிகர் ஆரவ்வும், இரண்டாவது சீசனில் ரித்விகாவும், மூன்றாவது சீசனில் முகென் ராவும், 4-வதாக நடிகர் ஆரியும் வெற்றி பெற்றுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் இந்நிகழ்ச்சிக்கு அரசியல்வாதிகள், சமூக அமைப்புகளிடம் இருந்து எதிர்ப்புக் குரல்கள் எழுந்தாலும் அது நிகழ்ச்சிக்கான புரமோஷனாக மாறி விடுகிறது.

தமிழில் முதல் மூன்று சீசன்களும் ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் தொடங்கப்பட்ட நிலையில் 4-வது சீசன் கொரோனா அச்சுறுத்தல் மற்றும் லாக்டவுனால் 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டு 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் முடிவடைந்தது.
இந்நிலையில் பிக்பாஸ் தமிழ் ஐந்தாவது சீசனை ஜூன் மாதம் 3 வாரத்திலிருந்து ஒளிபரப்ப விஜய் டிவி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பிக்பாஸ் 5 நிகழ்ச்சிக்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியிருப்பதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது.

இதனிடையே இந்தமுறை கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்களிடையே விஜய் டிவி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் ஒரு சில திரைபிலங்களின் பெயரும் அதில் அடிபடுகிறது. ஏற்கனவே நடிகர்கள் ராதாரவி, மன்சூரலிகான், எம்.எஸ்.பாஸ்கர் குக் வித் கோமாளி கனி, சுனிதா, பவித்ரா, ஆகியோர் பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது.

அதேபோல் முரட்டு சிங்கிள்ஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இனியன், பிளாக் ஷீப் யூடியூப் சேனலின் தொகுப்பாளர் வினோத் உள்பட பலர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகை ஷகிலாவின் வளர்ப்பு மகளான மிலாவின் பெயரும் பிக்பாஸ் 5 போட்டியாளர்கள் பட்டியலில் இணைந்துள்ளது.
Published by:Sheik Hanifah
First published: