Shakeela: ’குக் வித் கோமாளி’ நடிகை ஷகீலா மறைவா? வெளியான வீடியோ

ஷகீலா

ஷகிலாவின் உடல் நலம் குறித்தும், அவர் இறந்துவிட்டார் என்றும் செய்திகள் சமூக வலைதளங்களில் வெளியானதால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

  • Share this:
    நடிகை ஷகீலா இறந்து விட்டதாக வெளியான வதந்திகளுக்கு, தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    மலையாளத்தில் கவர்ச்சி நடிகையாக அறியப்பட்ட ஷகிலா தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தியில் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது வாழ்க்கை வரலாறு படமாக உருவாக்கப்பட்டு வெளியானது.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட ஷகீலா, தன் மீதான மற்றவர்களின் பார்வையை மாற்றினார். திருநங்கை ஒருவரை வளர்ப்பு மகளாக வளர்த்து வரும் ஷகீலாவின் குணம் ரசிகர்களால் பாராட்டப்பட்டது.

    இந்நிலையில் ஷகிலாவின் உடல் நலம் குறித்தும், அவர் இறந்துவிட்டார் என்றும் செய்திகள் சமூக வலைதளங்களில் வெளியானதால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தற்போது இதுகுறித்து ஷகிலா வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.



     




    View this post on Instagram





     

    A post shared by Filmy Kutz (@filmykutz)






    அதில், ”என்னைப் பற்றி வெளியான செய்தி முற்றிலும் வதந்தி. நான் தற்போது மகிழ்ச்சியாகவும் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறேன். அந்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாம். மேலும் என்னைப் பற்றிய வதந்தி பரவிய உடன் ஏராளமானோர் தனக்கு போன் செய்து நலம் விசாரித்த அனைவருக்கும் தனது நன்றி. குறிப்பாக இந்த அன்பை தெரிந்து கொள்ள வைத்த வதந்தியை பரப்பியவர்களுக்கும் எனது நன்றி” என்று தெரிவித்துள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: