Home /News /entertainment /

கர்ப்பிணி பெண்ணாக மாறிய நடிகை ஷகீலாவின் மகள் மிலா.. இன்ஸ்டாவில் நெகிழ்ச்சி பதிவு!

கர்ப்பிணி பெண்ணாக மாறிய நடிகை ஷகீலாவின் மகள் மிலா.. இன்ஸ்டாவில் நெகிழ்ச்சி பதிவு!

மாடல் மிலா

மாடல் மிலா

சன் டிவியில் ஒளிபரப்பான ‘தியாகம்’ மற்றும் ‘மருதானி’ என்கிற சீரியல்களில் நடித்துள்ளார் மிலா.

பிரபல நடிகை ஷகீலாவின் வளர்ப்பு மகளான நடிகை மிலா தான் - இன்ஸ்டாகிராமின் லேட்டஸ்ட் ஹாட் டாக்! மிலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் செய்துள்ள ஒரு புகைப்படமே இதற்கு காரணம். குறிப்பிட்ட புகைப்படத்தில் மிலா, ஒரு முழு மாத கர்ப்பிணி பெண்ணாக, வயிற்றை பிடித்துக்கொண்டு நிற்பது போல போஸ் கொடுத்து உள்ளார்.

கர்லீ ஹேர் ஸ்டைல், தலையில் கிரீடம், மிகவும் க்யூட் ஆன கவுன் அணிந்து போஸ் கொடுத்துள்ள மிலாவை விட குறிப்பிட்ட புகைப்படத்திற்கு அவர் கொடுத்துள்ள கேப்ஷன் தான் இன்னும் அழகானதாக இருக்கிறது. "என்னால் குழந்தை பெற முடியாது என்றாலும் கூட இந்த போட்டோ ஷுட் எனது கனவை நினைவாக்கி உள்ளது" என்று மிகவும் நெகிழ்ச்சியாக எழுதி உள்ளார் மிலா!



இந்த புகைப்படத்தை கண்ட மிலாவின் ரசிகர்கள், "சோ... கியூட்", "மிகவும் அழகாக இருக்கிறீர்கள்", "இந்த புகைப்படத்தை பார்த்து என் இதயம் நொறுங்கி விட்டது", "வருத்தப்படாதீர்கள் அக்கா" என்றெல்லாம் கமெண்ட்டுகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளது. மேலும் தற்போது வரை இந்த புகைப்படத்திற்கு 17,000 க்கும் மேலான லைக்ஸ்கள் விழுந்துள்ளது. இன்ஸ்டாகிராமில் மிலாவை சுமார் 1.7 லட்சம் பேர் ஃபாலோ செய்கிறார்கள் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.



also read : விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய சீரியல்.. யாரெல்லாம் நடிக்கப்போறாங்க தெரியுமா?

'அடல்ட்' திரைப்படங்களின் வழியாக பிரபலம் அடைந்த நடிகை என்கிற ஷகீலாவின் அடையாளம் விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 2 ஷோவிற்கு பிறகு முற்றிலுமாக மாறியது. பலரும் தன்னை "அம்மா" என்று அழைப்பது மிகவும் நெகிழ்ச்சியாக இருப்பதை அடிக்கடி அவரே கூறி உள்ளார். மேலும் அதே நிகழ்ச்சியின் வழியாகவே ஷகீலா திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்கிறார் என்கிற தகவலும், மிலா என்ற திருநங்கையை தத்தெடுத்து தன் மகளாக ஷகீலா வளர்த்து வருகிறார் என்பதும் தெரிய வந்தது.



ஷகீலாவின் வளர்ப்பு மகள் மிலா - ஒரு காஸ்ட்யூம் டிசைனர், மாடல் மற்றும் நடிகை ஆவார். ஷகீலாவின் வேற லெவல் "ரீ-என்ட்ரி" ஆக கருதப்படும் அதே குக்கு வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி வழியாகவே மிலா வெளி உலகத்திற்கு அறிமுகமாகினார். அன்று முதல் மிலா பெரும்பாலும் ஷகீலாவுடன் தான் காணப்படுகிறார். இவ்விருவரும் சேர்ந்து யூட்யூப்பில் வீடியோ வெளியிடுவதையும், பேட்டி கொடுப்பதும், போட்டோஷூட் நடத்துவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

also read : பிரிவுக்குப் பிறகு முதன் முறையாக நாக சைத்தன்யாவுடன் இருக்கும் படத்தை வெளியிட்ட சமந்தா...



2013ல், சன் டிவியில் ஒளிபரப்பான ‘தியாகம்’ மற்றும் ‘மருதானி’ என்கிற சீரியல்களில் நடித்துள்ள மிலா, விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் சீசன் 5ல் பங்கேற்பார் என்றும் தகவல்கள் வெளியானது, குறிப்பிட்ட நிகழ்ச்சியில் பலரும் இவரை எதிர்பார்த்தனர், ஆனால் இவர் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்கவே இல்லை.

 
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Album

அடுத்த செய்தி