புற்றுநோயுடன் போராடி வந்த சீரியல் நடிகை சரண்யா காலமானார்

சரண்யா சசி

இவருக்கு கடந்த 2012-ம் ஆண்டு மூளையில் புற்றுநோய் கட்டி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவருக்கு 11 முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

 • Share this:
  சின்னத்திரை நடிகை சரண்யா சசி மரணமடைந்தது சீரியல் ரசிகர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

  கேரளாவை சேர்ந்தவர் நடிகை சரண்யா சசி. மலையாளத்தில் சினிமா மற்றும் சீரியலில் நடித்தவர், தமிழில் பச்சை என்கிற காத்து என்ற படத்திலும் நடித்துள்ளார். இவருக்கு கடந்த 2012-ம் ஆண்டு மூளையில் புற்றுநோய் கட்டி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவருக்கு 11 முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

  அறுவை சிகிச்சை செய்தாலும் மீண்டும் கட்டி வந்து கொண்டிருந்தது. இதனால் அடிக்கடி அறுவை சிகிச்சை செய்யும் நிலை ஏற்பட்டது. சரண்யாவின் மருத்துவ சிகிச்சைக்காக நண்பர்கள் மற்றும் டெலிவிஷன் நடிகர்கள் சங்கம் உதவிக்கரம் நீட்டியது. இந்நிலையில் கடந்த மே மாதம் கொரோனா தொற்றுக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் சரண்யா.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதனிடையே நாளுக்கு நாள் சரண்யாவின் உடல்நிலை மோசமடைந்தது. சமீபத்தில் உடல் நலக்குறைவால் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சரண்யாவின் உயிர் சிகிச்சை பலனின்றி இன்று பிரிந்தது. இதைக் கேட்ட பிரபலங்களும், ரசிகர்களும் சரண்யா சசியின் மறைவுக்கு தங்கள் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: