Sanam Shetty: உங்கள் நேர்மை எங்கே? விலகிய மநீம உறுப்பினர்களை விளாசிய சனம் ஷெட்டி

நடிகை சனம் ஷெட்டி

மக்கள் நீதி மையத்தில் இருந்து தொடர்ச்சியாக பொதுச் செயலாளர் சந்தோஷ் பாபு, துணைத் தலைவர் மகேந்திரன், மதுரவாயலில் போட்டியிட்ட பத்மபிரியா ஆகியோர் வெளியேறினர்.

  • Share this:
    மக்கள் நீதி மையத்தில் இருந்து விலகுபவர்கள் எந்த காரணத்தினால் கட்சியிலிருந்து விலகுகிறார்கள் என மக்களிடம் தெரிவிக்க வேண்டும் என நடிகை சனம் ஷெட்டி வலியுறுத்தியுள்ளார்.

    மாடலும் நடிகையுமான சனம் ஷெட்டி, கடந்த பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு, ரசிகர்களிடம் இன்னும் பிரபலமானார். இந்நிலையில் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மையத்தில் இருந்து தொடர்ச்சியாக பொதுச் செயலாளர் சந்தோஷ் பாபு, துணைத் தலைவர் மகேந்திரன், மதுரவாயலில் போட்டியிட்ட பத்மபிரியா ஆகியோர் வெளியேறினர்.

    இது குறித்து ட்விட்டரில் கருத்து வெளியிட்டுள்ள சனம் ஷெட்டி, கட்சியின் வேட்பாளராக பிரச்சாரம் செய்யும் போது எதற்காக மக்கள் நீதி மையத்தில் சேர்ந்தீர்கள் என லட்சம் பேரிடம் பேசினீர்கள், ஆனால் தற்போது விலகும்போது தனிப்பட்ட காரணம் எனக் குறிப்பிட்டு இருப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். அதோடு கமல்ஹாசன் அதிகாரத்திற்கு வர வேண்டிய அவசியமில்லை என்றும், அவருடைய தொலைநோக்குப் பார்வை ஒன்றே போதும் என்றும் பாராட்டியுள்ளார் சனம் ஷெட்டி.

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவராக இருந்த டாக்டர் மகேந்திரன், கடந்த வாரம் கட்சியில் இருந்து விலகியதையடுத்து பல்வேறு நபர்கள் வெளியேறி வருகின்றனர். சட்டமன்ற தேர்தலில் மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட பத்மப்ரியா, மக்கள் நீதி மய்யத்தில் பொதுச் செயலாளராக இருந்து சந்தோஷ் பாபு ஐ.ஏ.எஸ் ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறிய போது காரணங்கள் எதுவும் சொல்லாமல், தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக குறிப்பிட்டிருந்தது கவனிக்கத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: