ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

விவாகரத்து அறிவிப்புக்குப் பின் சின்னத்திரைக்கு வரும் சமந்தா!

விவாகரத்து அறிவிப்புக்குப் பின் சின்னத்திரைக்கு வரும் சமந்தா!

சமந்தா

சமந்தா

கணவரை பிரிவதாக அறிவித்ததோடு சின்னத்திரை நிகழ்ச்சியிலும் கலந்துக் கொண்டுள்ளார் சமந்தா.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  நாக சைத்தன்யாவுடன் திருமண உறவை முறித்துக் கொள்வதாக அறிவித்த சமந்தா, சின்னத்திரைக்கு வரவிருக்கிறார்.

  படங்களில் ஒன்றாக நடித்து காதலில் விழுந்த சமந்தா - நாக சைத்தன்யா ஜோடி, கடந்த 2017, அக்டோபர் 7-ம் தேதி திருமணம் செய்துக் கொண்டது. கோவாவில் இவர்களின் திருமணம் மிகவும் கோலாகலமாக நடந்தது.

  இந்து - கிறிஸ்டியன் என இரு முறைப்படியும் நாகசைத்தன்யா - சமந்தாவின் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகும் ஹீரோயினாக நடித்து வந்தார் சமந்தா. சமீபத்தில் இவரது நடிப்பில் ‘தி ஃபேமிலி மேன் 2’ என்ற வெப் தொடர் வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

  இதற்கிடையே சமந்தா ட்விட்டரில் தனது பெயரை ‘எஸ்’ என மாற்றியதிலிருந்து, அவர் நாக சைத்தன்யாவை விவாகரத்து செய்யவிருப்பதாக தகவல்கள் வலம் வந்தன. ஆனால் இது குறித்து அவர்கள் இருவரும் வாய் திறக்கவில்லை. வெறும் வதந்தியாகவே இது முடிந்துவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், கடந்த சனிக்கிழமை தங்களின் திருமண உறவு முடிவுக்கு வந்திருப்பதை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் அறிவித்தனர் சமந்தாவும், நாக சைத்தன்யாவும்.

  இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் கணவரை பிரிவதாக அறிவித்ததோடு சின்னத்திரை நிகழ்ச்சியிலும் கலந்துக் கொண்டுள்ளார். தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் ஜெமினி டிவி-யில் தொகுத்து வழங்கும், ’எவரு மீலோ கோட்டீஸ்வரலு’ என்ற நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளவிருக்கிறார் சமந்தா. இந்த நிகழ்ச்சி தசரா சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகவிருக்கிறது.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Shalini C
  First published:

  Tags: Actress Samantha