• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சின்னத்திரைக்கு மீண்டும் திரும்பும் பிரபல இளம் சீரியல் நடிகை... ரசிகர்கள் ஆவல்!

சின்னத்திரைக்கு மீண்டும் திரும்பும் பிரபல இளம் சீரியல் நடிகை... ரசிகர்கள் ஆவல்!

ரீமா அசோக்

ரீமா அசோக்

விஜய் டிவி-யில் ஒளிபரப்பான டான்ஸ் ஷோவான, ஜோடி ஃபன் அன்லிமிடேட் நிகழ்ச்சியில் காமெடி கலைஞர் ராமருடன் ஜோடியாக டான்ஸ் ஆடினார்.

  • Share this:
தமிழ் சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் மூலம் அதில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு ரசிகர்கள் பட்டாளம் உருவாகி சோஷியல் மீடியாவை ஆக்கிரமித்து வருகின்றனர். அதிலும் சீரியல் நடிகைகளுக்கு ரசிகர்கள் அதிகம். அழகு, திறமை என ஒருசேர இருக்கும் நடிகைகளை ரசிகர்கள் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் பிரபல சீரியல் நடிகையாக இருந்து வருபவர் நடிகை ரீமா அசோக். இவர் கவர்ச்சி புயலாகவும் இருந்து வருகிறார். சோஷியல் மீடியாவில் இவர் பதிவிடும் ஹாட் போட்டோக்கள் அவ்வப்போது வைரலாகி வருகின்றன.

நடிகை ரீமா அசோக் 1995-ம் ஆண்டு நவம்பர் 3-ம் தேதி மதுரையில் பிறந்தவர். தமிழ் தொலைக்காட்சி நடிகைகள் மத்தியில் பிரபலமாக உள்ள ரீமா அசோக், ஸ்டார் விஜய் டிவி மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். கடந்த 2015-ல் ஒளிபரப்பான களத்து வீடு சீரியல் மூலம் ரசிகர்களிடையே அறிமுகமானார். தொடர்ந்து கல்யாணம் முதல் காதல் வரை, சரவணன் மீனாட்சி, றெக்கை கட்டி பறக்குது மனசு உள்ளிட்ட சீரியல்களில் நடித்தார். எனினும் இவரை சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் புகழ் பேர் செய்தது விஜய் டிவி-இல் ஒளிபரப்பான சின்னத்தம்பி சீரியல் தான். இந்த சீரியலில் இவர் மலர் என்ற கேரக்டரில் நடித்திருந்தார். இந்த சீரியலில் நடித்ததன் ரசிகர்கள் அனைவரின் மனதையும் கவர்ந்து இருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதே போல விஜய் டிவி-யில் ஒளிபரப்பான டான்ஸ் ஷோவான, ஜோடி ஃபன் அன்லிமிடேட் நிகழ்ச்சியில் காமெடி கலைஞர் ராமருடன் ஜோடியாக டான்ஸ் ஆடினார். இதனிடையே சின்னத்திரையில் குட்டி பிரேக் எடுத்திருந்த நடிகை ரீமா, தமிழ் ரசிகர்களை மகிழ்விக்க மீண்டும் ஸ்கிரீனில் தோன்ற இருக்கிறார். தன்னை மீண்டும் ஸ்கிரீனில் பார்க்க ஆர்வமாக இருக்கும் ரசிகர்களுக்கு தனது சோஷியல் மீடியாவான இன்ஸ்டா மூலம் நடிகை ரீமா இந்த செய்தியைப் பகிர்ந்து கொண்டு உள்ளார்.சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை ரீமா தொடர்ந்து தனது ரசிகர்களை போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்து மகிழ்வித்து வருகிறார்.



 




View this post on Instagram





 

A post shared by Rhema Ashok (@rhema_ashok)






இதனிடையே மீண்டும் ஸ்கிரீனில் தோன்ற போவது குறித்த செய்தியை ஷேர் செய்திருந்தாலும், அது என்ன நிகழ்ச்சி, என்பது பற்றிய தகவல்களை அவர் தற்போது வெளிப்படுத்தவில்லை. தனது இன்ஸ்டாவில் சில ஃபோட்டோக்களை ஷேர் செய்துள்ள ரீமா, எனது அடுத்த ப்ராஜக்ட் பற்றி கேட்டு கொண்டிருந்தவர்களுக்கு, இதோ பதில் "ஷூட்டிங் தொடங்கியது".

Also read... பிறந்தநாளை மறக்க முடியாத நாளாக மாற்றியிருக்கிறீர்கள்.. ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த நடிகை ஷபானா!

ப்ராஜக்ட்டின் பெயர் மற்றும் பிற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். ஏதேனும் கணிப்புகள் இருக்கிறதா!!!! மக்களே காத்திருங்கள்! விரைவில் வருகிறேன் என்று பதிவிட்டுள்ளார். இவரது போஸ்டை தொடர்ந்து விரைவில் உங்களை ஸ்க்ரீனில் காண ஆவலாக இருக்கிறோம், வாழ்த்துகள் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். நடிகை ரேமா ஒரு பன்முக திறமை வாய்ந்தவர். இவர் சிறந்த பயிற்சி பெற்ற திறமையான கிளாசிக்கல் நடன கலைஞர் மற்றும் தொழில்முனைவோர் ஆவார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: