Home /News /entertainment /

Bharathi Kannamma சீரியலில் மாஸ் என்ட்ரி கொடுத்த பிரபல நடிகை... இனி தான் இருக்குது ட்விஸ்டே!

Bharathi Kannamma சீரியலில் மாஸ் என்ட்ரி கொடுத்த பிரபல நடிகை... இனி தான் இருக்குது ட்விஸ்டே!

bharathi kannamma

bharathi kannamma

Bharathi Kannamma | பாரதி கண்ணம்மா சீரியலில் புதிதாக நடிகை ரேகா இணைந்துள்ளார். இனி சீரியல் மேலும் சூடுபிடிக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

விஜய் டிவி-யில் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்றாக இருந்து கொண்டிருக்கிறது பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் மக்களிடையே பிரபலமாக முக்கிய காரணம் இதில் முன்பு கண்ணம்மாவாக நடித்த நடிகை ரோஷினி ஹரிபிரியன் தான். தற்போது கண்ணம்மா கேரக்டரில் நடிகை வினுஷா தேவி நடித்து வருகிறார். இந்த சீரியலில் ஹீரோயினுக்கு அடுத்து முக்கியத்துவம் வாய்ந்த வில்லி கதாபாத்திரத்தில் வெண்பா ரோலில் நடிகை மற்றும் விஜே-வான ஃபரீனா ஆசாத் நடித்து வருகிறார்.

பாரதி மற்றும் கண்ணம்மாவை இணைக்க பெரியவர்கள் எடுத்த முயற்சி எல்லாம் தோல்வியை தழுவிய நிலையில், மகள்கள் இருவரும் தற்போது களமிறங்கியுள்ளனர். கண்ணம்மாவிடம் வளரும் லட்சுமிக்கு பாரதி தான் தனது அப்பா என்ற உண்மை தெரிந்துவிட்டது, பாரதியிடம் வளரும் ஹேமாவிற்கு சமையல் அம்மாவே தனக்கு அம்மாவாக வர வேண்டும் என்ற ஆசை எழுந்துள்ளது.

கடந்த எபிசோட்டில் ஹேமா இதைப் பற்றி கட்டுரையில் குறிப்பிட அவரது வகுப்பு டீச்சரோ, கண்ணம்மாவிடம் இதைப் பற்றி சொல்லிவிடுகிறார். போதாக்குறைக்கு கண்ணம்மாவை நேரில் பார்க்க வீட்டிற்கு வரும் ஹேமா, லட்சுமி வெளியே விளையாடப் போன நேரம் பார்த்து ‘லட்சுமியோட அப்பாவை டைவர்ஸ் பண்ணிட்டு, எங்க அப்பாவை கல்யாணம் பண்ணிக்கோங்க’ என வெகுளியாக கேட்கிறாள். இதையெல்லாம் வெளியில் நின்று கேட்டு கொண்டிருக்கும் லட்சுமி, எதுவும் தெரியாதது போல் உள்ளே வருகிறாள். அதன்பின்னர் ஹேமா அவளுடன் விளையாட சென்று விடுகிறாள்.



இதனால் அதிர்ச்சி அடையும் கண்ணம்மா நான் தான் உன் அம்மா என சொல்ல முடியாமல் தவிக்கிறாள். மற்றொரு புறம் பாரதியின் மருத்துவமனைக்கு திடீர் விசிட் அடிக்கிறார் நடிகை ரேகா. கெத்தாக பாரதியின் அறைக்குள் நுழையும் ரேகா, அவரைப் பார்த்த உடனேயே கண்ணம்மாவை விவாகாரத்து செஞ்சிட்டு என்னப் பண்ணப்போறீங்க? என கேட்கிறார்.

Also Read : கணவரை விட்டு பிரிவாரா பிரபல சீரியல் நடிகை.? அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

இதனால் பதற்றமடையும் பாரதி ‘நீங்க முதல்ல யாரு’ என கேட்கிறார். அதற்கு ரேகா, வெண்பா உங்கள கல்யாணம் பண்ணிக்க பத்து வருஷமா காத்துட்டு இருக்கா. அவளுக்கும் உங்களுக்கும் இடையே என்ன தொடர்பு?, அவங்க உங்களுக்கு தோழியா? காதலியா? இல்ல மனைவியா வரப்போறவளா? எனக்கேட்டு அதிர்ச்சி கொடுக்கிறார். இதனால் குழப்பமடையும் பாரதியும் போன் வருவதாக சொல்லிவிட்டு, வெளியே சென்றுவிடுகிறார்.



இதற்கு முன்னால் ஒளிபரப்பான எபிசோட்டில் வெண்பாவிற்கு அமெரிக்காவில் இருந்து ஒரு போன் வந்தது. அதை பார்த்து ஷாக்கான வெண்பா இத்தனை வருஷம் கழித்து ஏன் இவங்க நமக்கு போன் பண்றாங்கன்னு நினைத்து, போனையே சுவிட்ச் ஆப் செய்தார். அப்படி வெண்பாவே பதறிப்போன கேரக்டராக தான் ரேகா அறிமுகமாகியுள்ளார்.

Also Read : ஆஸ்கர் வென்ற படத்தில் நடித்த பீஸ்ட் வில்லன்!

ஏற்கனவே பாரதி - கண்ணம்மா இணைவார்களா?, பிரிவார்களா? என விறுவிறுப்பாக சீரியல் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், தற்போது ரேகாவின் என்ட்ரி சீரியலில் அதிரடி திருப்பத்தை ஏற்படுத்தும் என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இனி பாரதி கண்ணம்மா சீரியல் எப்படி போகும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Published by:Selvi M
First published:

Tags: Bharathi Kannama, Vijay tv

அடுத்த செய்தி