• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • நடிகை ரவீனாவின் காதலரா இவர்? பிறந்தநாளன்று ரசிகர்களுக்கு கொடுத்த சர்பிரைஸ்!

நடிகை ரவீனாவின் காதலரா இவர்? பிறந்தநாளன்று ரசிகர்களுக்கு கொடுத்த சர்பிரைஸ்!

நடிகை ரவீனா

நடிகை ரவீனா

ரவீனா, சின்னத்திரைக்கு வருதற்கு முன்பு வெள்ளித்திரையில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

  • Share this:
18-வது பிறந்தநாளைக் கொண்டாடிய நடிகை ரவீனா, தனது நெருங்கிய நண்பருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு சர்பிரைஸ் கொடுத்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மௌனராகம் சீரியலில் ரவீனா கதாநாயகியாக நடித்து வருகிறார். அவர் அண்மையில் 18-வது பிறந்தநாளை நண்பர்களுடன் இணைந்து கொண்டாடினார். அதில் ரவீனாவின் நெருங்கிய நண்பரான தீபக் ராஜாவும் கலந்து கொண்டார். பிறந்தநாளை வெகுவிமர்சையாக கொண்டாடிய ரவீனா, அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

அதில், தீபக் ராஜாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, அந்த போட்டோவுக்கு எழுதியுள்ள கேப்சன் தான் ஹைலைட். தீபக் ராஜாவுடன் கியூட்டாக இருக்கும் ரவீனா, அந்தப் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஐடியில் பகிர்ந்து, "என்னுடைய இந்த நாளை மறக்கமுடியாத நாளாக மாற்றியதற்கு நன்றி… அன்பே இதுவரை நடந்தவற்றில் மிகச் சிறந்தது நீங்கள் தான்… தயவு செய்து நிரந்தரமாக இணைந்து இருக்க முடியுமா?" என்ற வினாவுடன் முடித்துள்ளார்.

ரசிகர்களுக்கு சொல்லவா வேண்டும். புகைப்படம் போட்டாலே, கன்டென்டுக்கு பஞ்சம் இருக்காது. காதல் முதல் கல்யாணம் வரையிலான கன்டென்டுகள் இணையத்தை கலக்கும். இப்போது, எடுத்திருக்கும் போட்டோவுடன் தயவு செய்து நிரந்தரமாக இணைந்து இருக்க முடியுமா? என்ற கேப்சனைவேறு பதிவிட்டிருப்பதால், தீபக் தான் ரவீனாவின் காதலர் என முடிவு செய்துவிட்டனர்.




ஒரு பேச்சுக்கு நண்பராகவே கூட வாழ்க்கை முழுவதும் இருக்கலாம் என்ற சந்தேகத்தை கூட யாரும் எழுப்பவில்லை. அவர்கள் இருவரும் காதலர்கள் என்று கன்ஃபார்மே செய்துவிட்டனர். 18 வயது மேஜர் என்பதால், மேஜரானவுடன் காதலரையும் அறிமுகப்படுத்திவிட்டார், இருவருக்கும் வாழ்த்துக்கள் என சில நெட்டிசன்கள் கூறியுள்ளனர். மேலும் சிலர், ரசிகராக இருந்த எங்களுக்கு பெரும் இடியை இறக்கவிட்டார், பிறந்தநாள் அன்று வாழ்த்துக்களை கவிதையாக வடிக்கலாம் என்று எண்ணியிருந்தோம், ஆனால், எங்கள் ரசனைக்கு முடிவுரை எழுதிவிட்டாரே என ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

ரவீனா, சின்னத்திரைக்கு வருதற்கு முன்பு வெள்ளித்திரையில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக இளைய தளபதி விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளார். 2014ம் ஆண்டு வெளியான ஜில்லா படத்தில் அவருடன் இணைந்து குழந்தை நட்சத்திரமாக நடித்தார். இதற்கடுத்தபடியாக, விஷ்ணு விஷால் - அமலாபால் இணைந்து நடித்து பெரும் வெற்றியைப் பெற்ற ராட்சசன் திரைப்படத்தில் மாணவியாக நடித்திருந்தார்.

Also read... சின்னத்திரையின் நம்பர் 1 சீரியல் எது தெரியுமா? டிஆர்பி ரேட்டிங்கில் புதிய சாதனை!

பின்னர் சின்னத்திரைக்குள் நுழைந்த ரவீனா, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான டான்ஸ் ஜோடி டான்ஸ் 2.0 நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா சீரியலில் நடித்தார். அவருடைய நடிப்பு பரவலாக வரவேற்பை பெற்றதையடுத்து சின்னத்திரையில் அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் வரத்தொடங்கின. விஜய் டிவியில் ஹிட்டான மௌன ராகம் சீரியலின் 2வது பாகத்தில் நடிக்கும் வாய்ப்பும் ரவீனாவுக்கு கிடைத்தது. தற்போது இந்த சீரியலில் லீட் ரோலில் நடித்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: