• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பிறந்தநாளில் காதலரை அறிமுகப்படுத்திய ரகுல் ப்ரீத் சிங்!

பிறந்தநாளில் காதலரை அறிமுகப்படுத்திய ரகுல் ப்ரீத் சிங்!

ரகுல் ப்ரீத் சிங்

ரகுல் ப்ரீத் சிங்

நடிகை ரகுல் ப்ரீத் சிங இன்று தனது காதலரை வெளியுலகத்துக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.

  • Share this:
    ரகுல் ப்ரீத் சிங் இன்ஸ்டாகிராமில் தனது காதலரை அறிமுகப்படுத்தியுள்ளார்.

    தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். மகேஷ் பாபு, ராம்சரண், ஜுனியர் என்.டி.ஆர், அல்லு அர்ஜுன், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட பலருடன் ஜோடியாக நடித்துள்ளார். தற்போது தமிழில் கமல் நடித்து வரும் 'இந்தியன் 2', சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'அயலான்' ஆகிய படங்களும் அவரது கைவசம் உள்ளது.

    இந்நிலையில் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் ரகுல் ப்ரீத் சிங். அவருக்கு திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து அவர் தனது காதலரை வெளியுலகத்துக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.

    ரகுலுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவிக்கும் பொருட்டு, "நீயின்றி, நாட்கள் நாட்களாக இல்லை. நீயின்றி மிகவும் சுவையான உணவுகளில் எந்த சுவாரஸ்யமும் இல்லை. எனக்கு மிகவும் முக்கியமான மிக அழகான ஒரு ஆன்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். உன் புன்னகையைப் போலவே இந்த நாளும் உனக்கு மிகவும் பிரகாசமாகவும் உன்னைப் போல அழகாகவும் இருக்கட்டும். பிறந்தநாள் வாழ்த்துகள் என் அன்பே" என்று தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார் நடிகர் ஜாக்கி பாக்நானி.



     




    View this post on Instagram





     

    A post shared by JACKKY BHAGNANI (@jackkybhagnani)






    இதற்கு பதிலளித்த ரகுல் ப்ரீத் சிங், ”நன்றி என் லவ். நீ தான் இந்த ஆண்டு எனக்கு கிடைத்த மிகப் பெரிய பரிசு. என் வாழ்க்கையை அழகாக்கியதற்கு, என்னை தொடர்ந்து சிரிக்க வைப்பதற்கு, நீ நீயாக இருப்பதற்கு நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்



     




    View this post on Instagram





     

    A post shared by Rakul Singh (@rakulpreet)






    இதையடுத்து பலரும் ரகுல் - ஜாக்கிக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். அதோடு தமிழில் த்ரிஷா நடிப்பில் வெளியான 'மோகினி' படத்தில் ஜாக்கி பாக்நானி நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்இன்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: