• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Colors Tamil : ’சில்லுனு ஒரு காதல்’ தொடரில் நடிக்கும் வெள்ளித்திரை நடிகை..

Colors Tamil : ’சில்லுனு ஒரு காதல்’ தொடரில் நடிக்கும் வெள்ளித்திரை நடிகை..

நடிகை ராஜ ஸ்ரீ

நடிகை ராஜ ஸ்ரீ

Sillunu Oru kadhal Serial : காவல்துறையின் திட்டத்தை மீறி அமைச்சர் கொல்லப்படுகிறாரா? அல்லது காப்பாற்றப்படுகிறார? என்பது ட்விஸ்டாக இருக்கிறது.

  • Share this:
கருத்தம்மா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான மாதவி என்கிற ராஜஸ்ரீ, கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சில்லுனு ஒரு காதல் சீரியலில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ளார்.

பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த கருத்தம்மா திரைப்படம், மிகப்பெரிய வெற்றிப்படமாக கொண்டாடப்பட்டது. இந்தப் படத்தில் நடித்த ராஜஸ்ரீ, மிகவும் பாப்புலரானார். கருத்தம்மா திரைப்படத்துக்குப் பிறகு தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிப்படங்களிலும் நடித்தார். லீட் ரோலில் நடிப்பதற்கான வாய்ப்பு குறைந்ததால், அம்மா உள்ளிட்ட பிற துணை கதாப்பாத்திரங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் முழுமையாக வாய்ப்பு ஏதும் இல்லாததால் திரைத்துறையை விட்டு விலகினார்.

சிறிது காலம் விலகியிருந்த அவருக்கு மீண்டும் வெள்ளத்திரையில் வாய்ப்பு கிடைத்து நந்தா, அய்யனார் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இந்தப் படங்களில் நடிக்கும்போதே அவருக்கு சின்னத்திரையில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. நெஞ்சைத் தொட்ட கதைகள், இதயம் தொடர்களில் நடித்தார். இப்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘சில்லுனு ஒரு காதல்’ தொடரில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ளார். கல்பனா தேவி என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

also read : திருப்பதியில் நடிகை ரோஜாவை சந்தித்த விஷால் - புகைப்படங்கள்

இந்த ப்ரோமோ அண்மையில் வெளியாகி, ரசிகர்களுக்கும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது. வெள்ளித்திரையில் கருத்தம்மாவாக ஜொலித்த ராஜ ஸ்ரீ, அமைச்சராக இருக்கும் கல்பனா தேவியாக அசத்த உள்ளார். கதைப்படி, அமைச்சராக இருக்கும் கல்பனா தேவி, மூத்த காவல்துறை அதிகாரியுடன் விழா ஒன்றுக்கு செல்கின்றனர். அங்கிருக்கும் சில ரவுடிகள் அமைச்சரைக் கொல்வதற்கு திட்டம் தீட்டுகின்றனர். இந்த தகவல் காவல்துறை அதிகாரியான சூர்யகுமார் மற்றும் அவர்களது குழுவினருக்கு தெரியவருகிறது.



உடனடியாக அமைச்சரைக் காப்பாற்றுவதற்கான திட்டத்தில் குதிக்கும் காவல்துறையினர், அதற்கான வியூகங்களை திட்டமிட்டு வகுக்கின்றனர். காவல்துறையின் திட்டத்தை மீறி அமைச்சர் கொல்லப்படுகிறாரா? அல்லது காப்பாற்றப்படுகிறார? என்பது ட்விஸ்டாக இருக்கிறது. சமீர் அகமது காவல்துறை அதிகாரி சூர்ய குமாராக நடிக்கிறார். தர்ஷிணி கயல்விழி கதாப்பாத்திரத்திலும், துர்கா நிஷா கேரக்டரிலும் நடிக்கின்றனர். ராஜ ஸ்ரீ கங்கா யமுனா சரஸ்வதி, அகல் விளக்குகள் மற்றும் வம்சம், சித்தி 2 உள்ளிட்ட தொடர்களிலும் நடித்துள்ளார்.

அண்மையில் பேட்டி ஒன்றில், வெள்ளித்திரைக்கும், சின்னத்திரைக்கும் உள்ள வித்தியாசம் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு வெள்ளித்திரையில் நடிப்பது எளிது எனக் கூறியிருந்தார். சின்னத்திரையில் ஒரே நாளில் இரண்டு மூன்று எபிசோடுகள் கூட எடுக்கப்படுவதாகவும்,, ஒவ்வொரு எபிசோடுக்கும் முழு உழைப்பையும் கொடுத்தால் மட்டுமே மக்களிடம் ரீச்சாக முடியும் எனத் தெரிவித்தார். மேலும், திரைப்படம் ஒரு நாள் விமர்சனத்துடன் சென்றுவிடுகிறது. ஆனால், நாடகத்தில் நடிப்பவர்கள் தினம் தினம் விமர்சனத்தை எதிர்கொள்ள வேண்டியிருப்பதாகவும் ராஜஸ்ரீ கூறியிருந்தார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: