• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • கணவர் மறைவை நினைத்து கண்ணீர் விடும் பிக் பாஸ் பாவ்னி!

கணவர் மறைவை நினைத்து கண்ணீர் விடும் பிக் பாஸ் பாவ்னி!

பாவ்னி

பாவ்னி

இசைவாணி, சின்ன பொண்ணு, ஸ்ருதி, இமான் அண்ணாச்சி ஆகியோர் தங்களது கதையை கூறினர்.

  • Share this:
விஜய் டிவி-யில் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 5 கடந்த ஞாயிற்றுக் கிழமை தொடங்கியது. இந்த சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவ்னி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த சீசனில் முதல் லக்ஸுரி டாஸ்காக "ஒரு கத சொல்லட்டுமா?" என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொருவரும் அவர்கள் வாழ்கையில் நடந்த கதை பற்றி சொல்ல வேண்டும். மேலும் ஒருவர் பேசி முடித்தவுடன் அவர்கள் கூறிய கதைக்கு டிஸ்லைக்ஸ், லைக்ஸ், ஹார்ட் கொடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. அதன்படி போட்டியாளர்களுக்கு பாய்ண்ட்ஸ்கள் வழங்கப்படும் என தெரிகிறது.

இதுவரை இசைவாணி, சின்ன பொண்ணு, ஸ்ருதி, இமான் அண்ணாச்சி ஆகியோர் தங்களது கதையை கூறினர். நேற்று இமான் அண்ணாச்சி பேசிய போது சிரித்து கொண்டே பேசியதால் சலசலப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பேசிய ஸ்ருதி, தனது அப்பாவிற்கு அம்மா இரண்டாவது மனைவி என்றும் அதிக வயதுடையவர் என்பதால் எனக்கு தந்தை பாசம் என்பது என்ன என்று கூட தெரியாது என அழுதுகொண்டே பேசினார். மேலும் தந்தை இறந்த பின்னர் பட்ட கஷ்டங்கள் குறித்தும் தனது வெற்றி குறித்தும் பேசினார், இறுதியாக அனைவருக்கும் அறிவுரை கூறிய ஸ்ருதி, எப்போதும் ஒரு முடிவு எடுப்பதற்கு முன்னர் பல முறை யோசிக்க வேண்டும் என்று கூறினார். இவரது பேச்சு அனைவரது கவர்ந்த நிலையில் 9 ஹார்ட்ஸ்களை பெற்றார்.

Also read... இணையத்தில் வைரலாகும் மாளவிகா மோகனனின் ரீசென்ட் போட்டோஸ்!

இதனை தொடந்து பிரியங்கா பிக் பாஸை "பெருசு" என்று கலாய்த்து கொண்டிருந்தார். சின்ன பொண்ணு அக்காவின் நைட்டி காணாமல் போனதாகவும் அதனை பிக் பாஸ் தான் எடுத்து வைத்துள்ளார் என்றும் கூறினார். இதனால் நேற்றைய நிகழ்ச்சி கலகலப்பாக சென்றது. நேற்றைய ப்ரோமோவில் காட்டியவாறு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை.இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில், பாவ்னி இரவில் அழுது கொண்டிருக்கும் காட்சிகள் உள்ளது. மதுமிதாவிடம் பேசி கொண்டிருக்கும் பாவ்னி, என் கணவர் இறந்து 5 வருடங்கள் ஆகிறது, நான் இன்னும் அந்த நினைவுகளுடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எனக்கு பெரிய ஹீரோயின் ஆகவேண்டும் என்ற ஆசை எல்லாம் இல்லை, நான் எனது வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கேன் அவ்வளவு தான் என அழுது கொண்டே கூற அவரை மதுமிதா சமாதானப்படுத்துகிறார். இதனை கவனித்த பிரியங்கா அங்கு வந்து எதற்கு அழுதாய்? என கேட்க அதற்கு பாவ்னி எனக்கு ஆந்திர உணவு என கூறி சமாளிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இதனால் இன்று அவர் தனது வாழ்க்கை குறித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே சமூக வலைத்தளங்களில் நடிகை பாவ்னிக்கு ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர்.

முன்னதாக அறிமுக நிகழ்ச்சியில் பேசிய பாவ்னி, திருமணம் செய்து கொண்டு கணவர், குழந்தைகள் என மகிழ்ச்சியாக வாழ நினைத்தேன். ஆனால் அது எனக்கு கிடைக்கவில்லை என கூறியிருந்தார். பிரதீப் என்ற தெலுங்கு சீரியல் நடிகருடன் பாவ்னிக்கு திருமணம் நடந்த நிலையில் திருமணமான 8 மாதத்தில் பிரதீப் தனது வீட்டில் தற்கொலை செய்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: