நீண்ட வருடங்களுக்கு பிறகு சன் டிவி சீரியல் மூலம் மீண்டும் சின்னத்திரைக்கு வரும் மூத்த நடிகை!

பசி சத்யா

ஏராளமான முன்னணி படங்களில் அழுத்தமான பல கேரக்டர்களில் நடித்து நம் மனதில் இடம் பிடித்துள்ளவர் நடிகை பசி சத்யா.

  • Share this:
சின்னத்திரை ரசிகர்கள் தமிழ் சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்களை மிகவும் விரும்பி பார்த்து வருகின்றனர். இதனால் முன்னணி பிரபல தமிழ் சேனல்கள் அனைத்துமே போட்டி போட்டு கொண்டு சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றன. கொரோனா காலத்தில் ஷூட்டிங் நடத்த முடியாததால் பல சேனல்கள் தங்களது பழைய ஹிட் சீரியல்களை மறு ஒளிபரப்பு செய்தன. தற்போதைய சீரியல்களை போலவே ரசிகர்கள் அதற்கும் மீண்டும் அமோக வரவேற்பு கொடுத்தனர்.

அந்த வகையில் சன் டிவி-யில் மெட்டிஒலி, உதிரிப்பூக்கள், அத்திப்பூக்கள் உள்ளிட்ட சில சீரியல்கள் இன்னும் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக சன் டிவி-யின் மெகா ஹிட் சீரியலான மெட்டி ஒலி தற்போது மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இதை ஏராளமான சின்னத்திரை ரசிகர்கள் தற்போது பார்த்து மகிழ்ந்து வருகின்றனர். அந்த அளவிற்கு சீரியல் ரசிகர்களை கவர்ந்துள்ளது. சன் டிவி-யில் திங்கள் முதல் சனி கிழமை வரை தற்போது இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது பூவே உனக்காக சீரியல். இதில் பூவரசி கேரக்டரில் நாயகியாக நடித்து வருகிறார் நடிகை ராதிகா ப்ரீத்தி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதே போல கதிர் என்ற கேரக்டரில் நாயகனாக நடித்து வருகிறார் பிரபல சீரியல் நடிகர் முகமது அசீம். மிகவும் விறுவிறுப்பான கதைக்களம் கொண்ட இந்த பூவே உனக்காக சீரியலை ஏராளமான ரசிகர்கள் பார்த்து ரசித்து வருகின்றனர். இதற்கிடையே வெள்ளித்திரையில் ஒருகாலத்தில் பிரபலமாக இருந்த பல நடிகைகள் அங்கு மார்க்கெட் சரிந்த பிறகு சின்னத்திரையில் வலம் வருகின்றனர். துவக்கத்தில் சில வெள்ளித்திரை நடிகைகள் மட்டுமே டிவி நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களில் தலைகாட்டி வந்த நிலையில், சீரியல்களுக்கு கிடைத்த அமோக வரவேற்பை அடுத்து பெரிய நடிகர் மற்றும் நடிகையர் பட்டாளமே சின்னத்திரை பக்கம் ஒதுங்கினர்.

Also read... ’இந்த சீரியலாவது நல்லா இருக்கனும் கடவுளே’ - ரீ என்ட்ரி கொடுக்கும் நிவிஷா!

ஏராளமான முன்னணி படங்களில் அழுத்தமான பல கேரக்டர்களில் நடித்து நம் மனதில் இடம் பிடித்துள்ளவர் நடிகை பசி சத்யா. 1974-ம் ஆண்டு வெளியான நேற்று இன்று நாளை திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். 1979-ல் பசி என்ற திரைப்படத்தில் செல்லம்மா என்ற கேரக்டரில் திறம்பட நடித்த சத்யாவிற்கு, மூத்த நடிகை பானுமதி ராமகிருஷ்ணா பசி சத்யா என்று புனைபெயர் வழங்கினார்.

குணச்சித்திர வேடங்களில் மிகவும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஏராளமான ரசிகர்களை கொண்டவர் பசி சத்யா. பிற நடிகைகளை போலவே இவரும் வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு வந்தார். ராதிகாவின் சித்தி 1, செல்லமே, அண்ணாமலை, இளவரசி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து சின்னத்திரை ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார். தொடர்ந்து சீரியல்களில் நடித்து வந்த பசி சத்யா ஒரு கட்டத்தில் பல்வேறு காரணங்களால் சின்னத்திரையிலிருந்து ஒதுங்கி விட்டார். இதனிடையே பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிகை பசி சத்யா சீரியலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
View this post on Instagram

 

A post shared by SunTelevisions (@suntvfanzclub_)


சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக சீரியலில் நடிகை பசி சத்யா ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எனினும் ஏற்கனவே இருக்கும் கேரக்டருக்கு மாற்றாக வருகிறாரா அல்லது புதிய கேரக்டரில் நடிக்க உள்ளாரா என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. நீண்ட வருடங்கள் கழித்து சின்னத்திரையில் நடிகை பசி சத்யா தோன்ற உள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published: