Bigg Boss 2 Tamil: பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் வருகிறார் ஓவியா?

Bigg Boss 2 Tamil: பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் வருகிறார் ஓவியா?
நடிகை ஓவியா
  • News18
  • Last Updated: November 15, 2018, 5:47 PM IST
  • Share this:
`பிக் பாஸ் 2’ நிகழ்ச்சி குறித்து முக்கிய தகவல் ஒன்றை நடிகை ஓவியா உறுதி செய்துள்ளார்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி 100-வது நாளை எட்டியுள்ளது. தற்போது பிக்பாஸ் வீட்டிலிருக்கும் ஐஸ்வர்யா, ஜனனி, ரித்விகா,விஜயலட்சுமி ஆகிய 4 போட்டியாளர்களில் ஒருவர் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்.

அதன்படி நடிகை ரித்விகா 60 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்களின் வாக்குகளைப் பெற்று கடந்த இரண்டு நாட்களாக முதலிடத்தில் இருந்து வருகிறார். இரண்டாவது இடத்தில் ஐஸ்வர்யாவும், மூன்று மற்றும் நான்காம் இடங்களில் விஜயலட்சுமி, ஜனனி ஆகியோர் உள்ளனர்.


இதையடுத்து பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் அவ்வப்போது வீட்டிற்கு வருகை தந்த வண்ணம் இருக்கிறார்கள். இந்நிலையில், `உங்களையும் வீட்டுக்குள் பார்ப்பதற்கு ஏதாவது வாய்ப்பிருக்கிறதா?’ என ஓவியா ரசிகர் ஒருவர், அவரிடம் ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்குப் பதிலளித்த ஓவியா, `ஆமாம், காத்திருந்து பாருங்கள்’ எனக் கூறியுள்ளார். ஓவியா கூறியிருக்கும் இந்த பதிலின் மூலம் விரைவில் அவர் பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தருவார் என்று எதிர்பார்க்கலாம்.

First published: September 26, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்