முன்னணி சேனல்களின் டிஆர்பி ரேட்டிங்கில் முக்கிய பங்கு வகிப்பவை சீரியல்களே. சீரியல் பிரபலங்கள் பலர் மக்களின் மனதில் தனி இடம் பிடித்து உள்ளனர். அந்த வகையில் தெய்வமகள், நெஞ்சம் மறப்பதில்லை உள்ளிட்ட பல டிவி சூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்து தமிழ் சின்னத்திரை ரசிகர்களை கவர்ந்து இருப்பவர் நிஷா கணேஷ்.
வெள்ளித்திரை நடிகர் கணேஷ் வெங்கட்ராமனின் மனைவி தான் தான் நிஷா கணேஷ். இவர் நடிகையாக மட்டுமல்லாமல், பிரபல விஜே-வாகவும் புகழ் பெற்றவர். 2015-ஆம் ஆண்டு நடிகர் கணேஷ் வெங்கட்ராமை திருமணம் செய்து கொண்டார் நிஷா. இவர்களுக்கு கடந்த 2019-ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. முதன் முதலாக ஸ்டார் விஜய் டிவி-யின் கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதையில் திவ்யா என்ற கேரக்டர் மூலம் சின்னத்திரையில் அறிமுகம் ஆனார் நிஷா கணேஷ். இதனை தொடர்ந்து வள்ளி,தெய்வமகள், ஆஃபிஸ், சரவணன் மீனாட்சி, மகாபாரதம், தலையணை பூக்கள் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்து பிரபலமானார். சன் சிங்கர், கிச்சன் கலாட்டா, வேந்தர் வீட்டு கல்யாணம் உள்ளிட்ட பல ரியாலிட்டி ஷோக்களை தொகுத்தும் வழங்கி உள்ளார் நிஷா கணேஷ்.
மேலும் இவன் வேற மாதிரி, நான் சிகப்பு மனிதன், வில் அம்பு, சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது உள்ளிட்ட சில படங்களில் நடித்து வெள்ளித்திரையிலும் தோன்றி உள்ளார். சின்னத்திரையில் நடிகை நிஷா கணேஷ் கடைசியாக விஜய் டிவி-யில் ஒளிபரப்பான 'நெஞ்சம் மறப்பதில்லை' சீரியலில் தோன்றினார். கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் சின்னத்திரையில் பிரபல சூப்பர்ஹிட் சீரியல் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார் நிஷா கணேஷ்.
Also Read : மாடர்ன் டிரெஸ்ஸில் அசத்தல் லுக்கில் பிக்பாஸ் லாஸ்லியா..! போட்டோஸ்..
நெஞ்சம் மறப்பதில்லை சீரியலில் நடித்த போது கர்ப்பம் காரணமாக பாதியிலேயே சீரியலை விட்டு வெளியேறினார். இந்நிலையில் நிஷா கணேஷ் ஜீ தமிழ் சேனலின் சூப்பர் ஹிட் சீரியலான செம்பருத்தியின் வரவிருக்கும் எபிசோட்களில் ஒரு வழக்கறிஞராக கீதா சுப்ரமணியம் என்ற கேரக்டரில் தோன்ற உள்ளார். இந்த தகவலை தனது இன்ஸ்டா பேஜில் அவரே ஷேர் செய்து உள்ளார்.
ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து தன்னைப் பற்றிய ஒரு போட்டோவை ஷேர் செய்துள்ள நிஷா, மிஸ் கீதா சுப்ரமணியத்தை சந்திக்கவும்., விவரங்கள் மிக விரைவில் புதுப்பிக்கப்படும்.."என்று கேப்ஷன் கொடுத்து உள்ளார். நீண்ட இடைவேளைக்கு பிறகு சீரியலில் மீண்டும் தோன்ற உள்ள நிஷா கணேஷிற்கு சின்னத்திரை ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டு உள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.