• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • லட்சியத்துக்காக வீட்டை விட்டு ஓடிய நடிகை!

லட்சியத்துக்காக வீட்டை விட்டு ஓடிய நடிகை!

நிரிஷா

நிரிஷா

சினிமா ஆசையில் பல இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் வீட்டை விட்டு வெளியேறி முயற்சித்து வருகிறார்கள்.

  • Share this:
    சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்காக தான் வீட்டை விட்டு வெளியேறியதாக நடிகை ஒருவர் தெரிவித்துள்ளார்.

    சினிமா ஆசையில் பல இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் வீட்டை விட்டு வெளியேறி முயற்சித்து வருகிறார்கள். அந்த வகையில் நேபாளத்தைச் சேர்ந்த நடிகை நிரிஷா பாஸ்னெட் சினிமா மோகத்தால் வீட்டை விட்டு மும்பைக்கு சென்றதாக சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

    தனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது சிறு வயதிலிருந்தே கனவு இருந்ததாகவும், அந்த கனவை நிறைவேற்றுவதற்காக ஒரு கட்டத்தில் நேபாளம், காத்மண்டுவில் உள்ள தனது வீட்டிலிருந்து மும்பைக்கு ஓடி வந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய நிரிஷா, “மும்பையில் எனக்கு யாரையும் தெரியாது என்றாலும் கொஞ்சம் பணம் மற்றும் நிறைய நம்பிக்கையுடன் காத்திருந்தேன். என்னுடைய காத்திருப்பு வீண் போகாமல் தொலைக்காட்சி தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது” என்றும் கூறினார்.

    அதோடு, நம்பிக்கை தான் இந்த அளவிற்கு தன்னை உயர்த்தியிருப்பதாகவும், சினிமா வேலையை தான் மகிழ்ச்சியுடன் செய்து கொண்டிருக்கின்றேன் என்றும் நடிகை நிரிஷா அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: