கொரோனா அச்சுறுத்தல் - சன் டி.வி சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்த நடிகை

கொரோனா அச்சுறுத்தலால் சன் டிவி சீரியலில் இருந்து விலகுவதாக சின்னத்திரை நடிகை மெர்ஷீனா அறிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் -  சன் டி.வி சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்த நடிகை
நடிகை மெர்சீனா
  • Share this:
கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி தொடங்கி மே மாதம் இறுதி வரை சீரியல் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் ஜூன் 1-ம் தேதி முதல் 60 பேருடன் படப்பிடிப்பு நடத்த அரசு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டன.

மீண்டும் ஜூன் 19-ம் தேதி முதல் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு ஜூலை 5-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து தற்போது மீண்டும் சின்னத்திரை படப்பிடிப்பு பணிகள் தொடங்கியுள்ளன. இதையடுத்து விரைவில் புதிய எபிசோட்கள் ஒளிபரப்பாக இருக்கின்றன.

இந்நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த அக்னி நட்சத்திரம் என்ற தொடரில் அகிலாவாக நடித்த மெர்ஷீனா அத்தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார்.


இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கும் நடிகை மெர்ஷீனா, “எப்போது அக்னி நட்சத்திரம் மீண்டும் ஒளிபரப்பாகும் என்று எனக்கு நிறைய மெசேஜ்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. நாம் கொரோனா பெருந்தொற்று காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதனால் இந்த நேரத்தில் பயணம் மேற்கொள்வது பாதுகாப்பானது அல்ல. என்னால் வாரத்துக்கு ஒருமுறை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு படப்பிடிப்புக்காக செல்வது முடியாத ஒன்று. ஏனெனில் திருவனந்தபுரத்தை விட சென்னையில் சூழ்நிலை மோசமாக இருக்கிறது.

 




View this post on Instagram




 

Hallo everyone I hav got lots msgs asking about Akhila and agninakshathram's restart .. So yeah as we are living in a Pandemic period , it's not safe to travel around ... therefore I cant travel in each weeks for work from one place to another bcs situions are getting worst in chennai as well as in trivandrum So Agninakshathram will restarts its telecast soon with a New Akhila ... Another Actress will play the character Akhila from next fresh episodes.... Thankyou soo much to the audience who accepted me as the psycho,cunning Akhila... It's the first time that played a negative shade role And somehow I got good response for the performance as Akhila ... The period that I played Akhila is memorable experience.. Hopefully I will come back to tamil audience with a different character soon after the pandemic is over ... Thankyou 💙 #Akhila #agninatchathiram #agninakshathram #mersheenaneenu


A post shared by neenu (@mersheenaneenu) on






எனவே அக்னிநட்சத்திரம் தொடர் புதிய அகிலா கதாபாத்திரத்துடன் விரைவில் சன் டிவியில் ஒளிபரப்பாகும். எனக்கு பதிலாக மற்றொரு நடிகை நடிப்பார். என்னுடைய கதாபாத்திரத்தை ஏற்றுக் கொண்ட பார்வையாளர்களுக்கு நன்றி. முதல்முறையாக எதிர்மறையான அகிலா என்ற கதாபாத்திரத்தில் நடித்து, அதற்கு நல்ல வரவேற்பும் பெற்றேன். அகிலா கதாபாத்திரத்தில் நடித்தது மறக்க முடியாத ஒன்று.

கொரோனா பிரச்னை முடிந்ததும் மீண்டும் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் தமிழ் மக்களை சந்திப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.
First published: July 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading