பிரபல முன்னணி தமிழ் சேனல்கள் எல்லாவற்றிலும் திங்கள் - சனி வரை டஜனுக்கும் மேற்பட்ட சீரியல்கள் ஒளிபரப்படுகின்றன. வித்தியாசமான கதைகள் மற்றும் திறமையான நடிகர்களுடன் சீரியல்கள் இருப்பதால் சின்னத்திரை ரசிகர்களை சீரியல்கள் தொடர்ந்து கவர்ந்து வருகின்றன.
வித்தியாசமான ஷோக்கள் மற்றும் சீரியல்களை ஒளிபரப்புவதில் முன்னணி தமிழ் சேனல்களில் ஒன்றாக இருந்து கொண்டிருக்கிறது கலர்ஸ் தமிழ் சேனல். அம்மன், இதயத்தை திருடாதே, எங்க வீட்டு மீனாட்சி, அபி டெயிலர், சில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட பல ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இதனிடையே சமீபத்தில் நம்ம மதுரை சிஸ்டர்ஸ் மற்றும் மீண்டும் மண் வாசனை என்ற 2 சீரியல்கள் கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாக துவங்கியது. கலர்ஸ் தமிழ் சேனலின் புத்தம் புதிய சீரியல்களின் பட்டியலில் சமீபத்தில் இணைந்த சீரியல் "இது சொல்ல மறந்த கதை" ஆகும். கடந்த மார்ச் 7-ஆம் தேதி முதல் இரவு 09:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இது சொல்ல மறந்த கதை சீரியல் மெதுவாக தமிழ் ஆடியன்ஸின் கவனத்தை பெற தொடங்கி இருக்கிறது. இந்த சீரியலில் சாதனா என்ற லீட் ரோலில் நடிகை ரச்சித்தா மகாலட்சுமியும், அர்ஜுன் என்ற லீட் ரோலில் நடிகர் விஷ்ணுவும் நடிக்கின்றனர்.
இந்த சீரியலின் கதையானது தனது மறைந்த கணவரின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்திய வழக்கில் அவர் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க போராடும் சாதனா, அவரது 2 குழந்தைகள் என ஒரு இளம் விதவையின் வாழ்க்கையைச் சுற்றி நகர்கிறது. இதில் நேர்மையான பத்திரிக்கையாளர் கேரக்டர் தான் அர்ஜுன். சீரியலில் இடம் பெற்றுள்ள நடிகர்கள் ஏற்கனவே தங்கள் வலுவான நடிப்பால் ஆடியன்ஸை கவர்ந்து வருகின்றனர். இந்நிலையில் இப்போது மற்றொரு நடிகை இந்த சீரியலில் புதிதாக இணைந்துள்ளார். வீடியோ ஜாக்கியாக இருந்து நடிகையாக மாறிய விஜே மகாலட்சுமி இந்த சீரியலில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.
இது சொல்ல மறந்த கதை சீரியலின் தயாரிப்பாளர்கள் விஜே மகாலட்சுமி இடம் பெறும் ப்ரமோவை சோஷியல் மீடியாவில் ஷேர் செய்துள்ளதோடு "உண்மை நம்ம பக்கம் இருக்கு சாதனா கவலைப்படாதீங்க.." என்று அதற்கு கேப்ஷன் கொடுத்துள்ளனர். இந்த சீரியலில் சௌந்தர்யா என்ற ஒரு பிரபல கிரிமினல் வக்கீல் ரோலில் விஜே மகாலட்சுமி நடிக்கிறார். இவர் சாதனாவிற்கு எதிராக கட்டிட ஒப்பந்ததாரர் நல்லசிவத்திற்கு ஆதரவாக வழக்கில் வாதாடும் காட்சிகளும் ப்ரமோ வீடியோவில் இடம்பெற்றுள்ளது. மறைந்த கணவரின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்திய வழக்கில் கணவர் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க சாதனாவுக்கு, வக்கீல் சௌந்தர்யா இப்போது மேலும் ஒரு தடையாக வந்துள்ளார். மறைந்த கணவர் நிரபராதி என்பதை நிரூபிக்கும் முயற்சியில் சாதனா வெற்றி பெறுவாரா.? அவள் வாழ்க்கையை புதிதாக தொடங்க இன்னொரு வாய்ப்பு கிடைக்குமா..? உள்ளிட்ட பல கேள்விகளுக்கான பதில்கள் தான் கதையின் கருவாக இருக்கிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.